herzindagi
women entrepreneur pose

Womenpreneur Awards 2023: பெண் தொழில்முனைவோர்களுக்கான பிரத்யேக விருதுகள் 2023

பல்வேறு துறைகளில் தொழில் முனைவோராக சாதிக்கும் இந்தியப் பெண்களை அங்கீகரிக்கும் விதமாக வருகிறது Womenpreneur 2023 விருதுகள். 
Editorial
Updated:- 2023-02-08, 09:57 IST

அன்பான வாசகர்களே!

கடமையை செய்தால் பலனை எதிர்பார்க்கத்தான் வேண்டும். இதோ உங்கள் தொழிலுக்காக நீங்கள் ஆற்றிய கடமையின் பலனை அடைய ஒரு மிகசிறந்த வாய்ப்பு.

வணிகம், வர்த்தகம், கலை, ஒப்பனை, ஊடகம், சமூக வலைதளம் என பல்வேறு பிரிவுகளில் பெண்கள் தவிர்க்கமுடியாத தொழில்முனைவு சக்திகளாக உருவெடுத்துள்ளானர். கூரிய இலக்கும் கூர்த்த மதியுடன் கூடிய கடின உழைப்பும் இணைந்துதான் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ளது. அவர்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகள் வழங்கி பெருமை கொள்கிறது ஹெர்ஸிந்தகி தமிழ்.

பெண் தொழில் முனைவோரைக் குறிக்கும் விதமாக வுமன்ப்ரீனர் (Women+Entrepreneur = Womenpreneur) என்ற பெயரில் இந்த ஆண்டு வழங்கப்பட இருக்கும் இந்த விருதுகளுக்கு நீங்கள் அல்லது உங்கள் பகுதியில் இருக்கும் வேறொரு பெண் தகுதியுடைவராக இருப்பார் என்று நீங்கள் நினைத்தால், இந்த விருதுக்கான தேர்வுக்குழுவிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம்.

பரிந்துரைகளின் அடிப்படையில் நடுநிலையான தேர்வுக்குழு முடிவு செய்து விருதுகளை அறிவிக்கும். பெண்கள் பெரும்பாலும் தாங்கள் செய்யும் தொழில்கள் குறித்தோ அல்லது தங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் குறித்தோ அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்றொரு பேச்சு உண்டு. ஆனால், அதற்கான அவசியம் இல்லை. அனைவரது உழைப்பும் நிச்சயம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த வரிசையில் வரலாறு நெடுக முறையான அங்கீகாரமற்று தடைகளுக்குள்ளுக், சமூக கட்டுகளுக்குள்ளும் கிடந்த பெண்கள் இப்போது வெளியே வந்து பொது சமூகத்தின் முன் வென்று நிற்கிறார்களென்றால், அந்த உழைப்பை அங்கீகரித்து போற்ற வேண்டியது சமூக கடமை என்று ஹெர்ஸிந்தகி நம்புகிறது.

women entrepreneur contest

உங்கள் உழைப்பின் அளவு சிறிதாகத் தெரிந்தாலும் சமூகத்தில் அதற்கான அவசியமும் தாக்கமுமே உண்மையான அளவை நிர்ணயிக்கும், எனவே எந்த தயக்கமும் வேண்டாம்.

நீங்கள் சுயமாக தொழில் நடத்தி வருகிறீர்களா? அல்லது பிற தொழிலுக்கு முதலீட்டாளராக உள்ளீர்களா? மாணவப்பருவத்திலேயே தொழில் செய்கிறீர்களா? நிறுவனம் ஒன்றின் தலைமை செயலதிகாரி பொறுப்பில் உள்ளீர்களா? எப்படியாயினும் உங்கள் கடந்து வந்த பாதையின் கதை, உங்கள் சாதனைகளை தேர்வுக்குழுவுக்கு அனுப்புங்கள்.

கீழ்க்கண்ட இந்த இணைப்பில் பதிவு செய்யலாம். https://gbsfwqac.top/specials/women-entrepreneur-awards/index.php

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

வென்றாலும் தோற்றாலும் உலகம் விமர்சனம் மட்டுமே செய்யும். உங்கள் உழைப்பை நீங்கள்தான் பதிவு செய்ய வேண்டும். தொடங்குங்கள். உங்கள் பகுதியில்/உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இதனைப் பகிர்வதன் மூலம் எங்கோ மூலையில் இருக்கும் ஒருவரது உழைப்பை தேசம் முழுக்க அடையாளப்படுத்த உதவுகிறீர்கள் என்று பொருள். பகிருங்கள். நன்றி.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]