herzindagi
Padmini Janaki main image

Women's Day Special: தாய்மை என்பது பெண்ணின் விருப்பம்.. அவளின் மனநிலை ரொம்ப முக்கியம்!

பெண்கள் கர்ப்பகால பிரச்சனைகள் குறித்து மைண்ட் & மாம் ஆப் தலைமை நிர்வாக அதிகாரி பத்மினி ஜானகி கூறியிருப்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-03-30, 09:13 IST

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை என்னவென்று கேட்டால் அது கருத்தரிப்பு தான். பெண்கள் கர்ப்பகாலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆப் தான் இந்த மைண்ட் & மாம்(MIND & MOM). மகளிர் தினத்தை முன்னிட்டு மைண்ட் & மாம் ஆப்-இன் தலைமை நிர்வாக அதிகாரி பத்மினி ஜானகியுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.  

சொந்தமாக தொழில் துவங்க எப்படி யோசனை வந்துச்சு ? 

உண்மைய சொல்லனும்னா நான் சின்ன வயசுல பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுவேன் என கனவுல கூட நான் எதிர்பார்க்கல. முதலில் எனக்கு entrepreneur என்ற வார்த்தை ரொம்ப புதுசா இருந்துச்சு.  சொந்தமா தொழில் ஸ்டார்ட் பன்றவங்கள அப்படி சொல்லுவாங்க. இது என் வாழ்க்கையில் தானாக நடந்த ஒரு விஷயம் தான். நான் சந்தித்த மக்கள் என்னை இந்த தொழில் துவங்கும் வழியில் கூட்டிட்டு வந்துட்டாங்க என்று தான் சொல்லணும். இன்னைக்கு நான் ஒரு பிசினஸ் விமன் ஆகிவிட்டேன் என்று யோசிக்கிறதை விட அடுத்து என்ன பண்ணப் போறோம் என அதிகம் யோசிக்கிறேன்.

பெண்களுக்கான கர்ப்பகால ஆரோக்கியம் குறித்த Mind & Mom ஆப் துவங்க காரணம் என்ன?

இந்தியாவைப் பற்றி பேசும்போது கண்டிப்பாக இந்தியாவில் இருக்க மக்கள் தொகையை பற்றி தான் பேசணும். 1.4 பில்லியன் மக்கள் இருக்க ஒரு நாடு தான் இந்தியா. இங்க எல்லாரும் மக்கள் தொகையை ஒரு பிரச்சனையா பாக்குறாங்க, ஆனா இந்த மக்கள் தொகை தான் நம்மளுடைய அடையாளம். எல்லாப் பிரச்சனையும் சின்னதா பாக்குறப்போ பிரச்சினையே நம் கண்ணுக்கு தெரியாது. ஒரு பெண்ணாக நீங்க குழந்தை பெற்று குடும்பம் ஆரம்பிக்கணும் என்று முடிவு எடுக்கிறது ரொம்ப சாதாரண இயற்கையான விஷயம் தான். ஆனால் இப்போதெல்லாம் அது இயற்கையாகவே நடப்பது இல்லை. இதுக்கு அதிக அளவு ஆதரவு தேவைப்படுகிறது. நம்ம ஊருல தெருவுக்கு தெரு ஒரு கருத்தரிப்பு மையம் ஆரம்பிச்சுட்டாங்க. இதனால் எனக்கு கர்ப்பகால ஆரோக்கியம் குறித்து பெண்களிடம் பேச ஒரு ஆப் தேவைப்பட்டது. 

padmini janaki ceoஉங்கள் பிசினஸ் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? 

முதலில் நான் ஒரு பிசினஸ் துவங்கும் போது ரொம்ப அதிகமா கஷ்டப்பட்டேன் என்று தான் சொல்லணும். இதுக்கு முன்னாடி ஒரு நிம்மதியான கார்ப்பரேட் கம்பெனி வாழ்க்கை, நேரத்துக்கு ஊதியம், வெளிநாடு சுற்றுலா, ரொம்ப வசதியான ஆன வாழ்க்கை. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி அதுதான் என்னுடைய கனவு வாழ்க்கையா இருந்துச்சு. ஒரு வசதியான வாழ்க்கையை விட்டுட்டு முழு நேரமாக இறங்கி ஒரு தொழில் தொடங்குவது கண்டிப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுவும் பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட இந்த விஷயம் எனக்கு ரொம்பவே புதுசு. வெளியில் இருந்து வந்த சவால்களை சந்தித்ததை விட எனக்குள் இருந்த சவால்களும் போராட்டங்களும் தான் அதிகம். 

தாய்மை பற்றி உங்கள் கருத்து?

கல்யாணமான பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்வது உங்களுடைய விருப்பம். ஒருவேளை நீங்கள் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்தாலும் நீங்கள் எந்த விதத்திலும் மற்ற பெண்களை விட குறைவாக இருப்பதுபோல நினைக்க கூடாது. தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெண் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் குழந்தை பெற்றெடுக்க தயாராகும் போது தான் அவள் முழுமையாக தாய்மையை உணர்கிறாள். இந்த சமூகத்திற்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்றும் குழந்தை பெற்றெடுக்க முடிவு எடுக்கக் கூடாது. 

ஒரு தாய் அவள் குழந்தைக்கு எப்படி ஆதரவாக இருக்கலாம்?

நீங்கள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்து விட்ட பிறகு நீங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் அந்த குழந்தை கூட இருக்கிறது ரொம்ப முக்கியம். குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்த பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு புரிதலும் சமநிலையும் கொண்டு வருவது மிகவும் அவசியம். உங்கள் குழந்தைகள் கூட அதிக நேரம் செலவழிக்க வேண்டும். நீங்க பேசுற வார்த்தைகள் தான் உங்கள் குழந்தைகளை நாளைய சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக மாற்றும். அப்போது அந்த தாயும் கண்டிப்பாக குழந்தையுடன் சேர்ந்து வளர்கிறாள். இது பெண்களின் வாழ்க்கையில் ஒரு அழகான தருணம். இன்னும் சொல்லப்போனால் நான் என்னுடைய பெண் குழந்தையோடு அதிக நேரம் செலவழிக்க அடிக்கடி விரும்புவேன்.

mind and mom padmini janakiமனரீதியாக ஒரு தாய் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம்?

முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும், நம்முடைய மன நிம்மதியை பாதுகாக்க வேண்டும். எனக்கு எல்லாமே தெரியும் என்ற மனநிலை முதலில் மாற்ற வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது. முக்கியமாக எதுவுமே புதுசா கற்றுக் கொள்ள முடியாது. ஒரு தாய் தன் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்த முதலில் அவள் மனநிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

பெண்கள் சந்திக்கும் கர்ப்பகால பிரச்சனைகளுக்கு அவர்கள் மனநிலை காரணமா? 

கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்தை விட பெண்ணின் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம். நீங்கள் மனநிலை ஆரோக்கியமாக இல்லாத போது குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி யோசிக்கவே கூடாது. ஏனென்றால் அது உங்களையும் பாதிக்கும், பிறக்கும் அந்த குழந்தையையும் பாதிக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தவுடன் கணவன் மனைவி இருவரும் ஏதேனும் தெரப்பி செல்வது நல்லது. அவர்கள் மனரீதியாக முதலில் தயாரான பிறகு உடல் ரீதியாக தயாராக ஈசயாக இருக்கும்.

padmini ()

அம்மாவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டு ஒரு விஷயம்?

நான் என் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், சோகமாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி எதுவுமே என்னை பாதிக்காமல் இருக்க அம்மா முயற்சி செய்வாங்க. என்ன நடந்தாலும் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உடனே சென்று அன்றாடம் வேலையை செய்வாங்க. இன்னொரு விஷயம் அவங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது, எந்த நேரத்திலும் அவங்க முடியாது என்ற பதிலை சொல்லவே மாட்டாங்க, கண்டிப்பா எல்லாமே முயற்சி செய்து பார்ப்பாங்க.

சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கும் பெண்களுக்கு சில வார்த்தைகள்? 

நம்ம எல்லோரும் ஒரு குட்டி ஷெல் உள்ள இருக்கிறோம். அதில் இருந்து முதலில் வெளியில் வரணும். இதை இப்படித்தான் பண்ணனும், அதை அப்படிதான் பண்ணனும் என்ற எந்த அவசியமும் இல்லை. இந்த சமுதாயத்தில் இருக்கும் எதிர்பார்ப்பில் இருந்து முதலில் வெளியில் வரவேண்டும். பெண்களுக்கு என்று இன்றைய சமூகத்தில் பல வாய்ப்புகள் கொட்டி கிடக்குது. நமக்கு புடிச்ச விஷயத்தை தேர்ந்தெடுத்து அதில் என்ன பண்ணலாம் என்று யோசிக்க வேண்டும். ஆட்டோமொபைல், டெக்னாலஜி என்ற துறைகள் கூட தேர்ந்தெடுக்கலாம். நாம் நம்ம தகுதி இவ்வளவுதான் என்று குறைத்து எடைப் போடவே கூடாது. நம்ம எப்போதும் பெருசா தான் யோசிக்கணும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]