ரம்ஜானுக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானதாக உள்ளது மிலாடி நபி. மிலாத் உன் நபி, மிலாதுன் நபி என பல பெயர்களில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை இஸ்லாமிய நாள்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரக்கூடும். இந்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது? வரலாறு மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு உங்களது வாழ்த்துக்களை எப்படி தெரிவிக்கலாம்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: Ramzan Wishes : வாழ்வில் வசந்தம் வளர்பிறையாய் வளர இனிய ஈகைத் திருநாள், ரம்ஜான் வாழ்த்துகள்
இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், அனைத்து மதங்களையும் மதித்து நடத்தல் போன்ற அனைத்துப் பண்புகளோடு வாழ்ந்து வந்தார். இவரை தங்களின் வாழ்நாள் முழுவதும் நினைவுக்கூறும் விதமாக இஸ்லாமிய சகோதரர்கள், அவர் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் மிலாடி நபி திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். முகமது நபி கிபி 570 ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாள்காட்டியின் மூன்றாவது மாதத்தில் 12 ஆவது நாளில் மக்கா நகரில் அவதரித்தார் என வரலாறுகள் கூறுகிறது. இந்த நாளைத் தான் இஸ்லாமிய சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் மிலாடி நபி நாளாக கொண்டாடிவருகின்றனர். இந்தாண்டு வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாடி தினம் கொண்டாடப்படவுள்ளதாக தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிடமும் அன்புக்காட்டிய இறைத்தூதர் பிறந்த தினமான மிலாடி நபி தினத்தில் அவரது போதனைகளை நினைவுக்கூர்வார்கள். இந்த மதத்தின் புனித நூலான குரான் வாசிப்பதை இந்த நாளில் மிகுந்த சிறப்பு என கருதுகின்றனர். அனைவரிடமும் கருணையுடன் செயல்பட வேண்டும் என தங்களுடைய குழந்தைகளுக்குப் போதிப்பார்கள். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை இத்திருநாளில் வழங்குவதை இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் மேற்கொண்டுவருகின்றனர். அனைத்து மசூதிகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெறும். இதோடு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர்களுக்குப் பிடித்த பொருட்களையும் பரிசாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க: Ramzan fasting : நோன்பு காலத்தில் சாப்பிட வேண்டிய ஸஹர், இப்தார் உணவுகள்
இஸ்லாமிய சகோதர்கள் அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்கள்.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]