திருமண பேச்சு ஆரம்பித்தாலே நம் வீடுகளில் முதலில் பார்ப்பது ராசி பொருத்தம் தான். கன பொருத்தம் மகேந்திர பொருத்தம் ரஜ்ஜு பொருத்தம் தின பொருத்தம் யோனி பொருத்தம் வசிய பொருத்தம் என பல ராசி பொருத்தங்கள் உள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு மொத்தம் பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. அதில் எட்டாவது பொருத்தம் தான் இந்த வசிய பொருத்தம். இது ஒரு முக்கியமான பொருத்தம் என்று கூறலாம். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் உள்ள ஈர்ப்பை குறிக்கும் ஒரு பொருத்தம் இந்த வசிய பொருத்தம். இந்த ராசி பொருத்தம் இருந்தால் மட்டும்தான் கணவன் மனைவி உறவில் அன்பு மகிழ்ச்சி இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வரிசையில் திருமணம் செய்ய வசிய பொருத்தம் ஏன் முக்கியம் என்றும் வசிய பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தால் என்ன ஆகும் என்றும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வசிய பொருத்தத்தின் முக்கியத்துவம்:
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி உறவில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் இருவரும் அன்பாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு வசிய பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த வசிய பொருத்தம் இருக்கும் கல்யாண தம்பதிகள் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அன்புடனும் நிம்மதியுடனும் வாழ்கிறார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. ஒரு சில ராசிகளின் குணத்திற்கு பிற ராசிகளின் குணம் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த வசிய பொருத்தம் பார்க்கப்படுகிறது.
உதாரணமாக மேஷ ராசியின் குணம் என்னவென்று பார்த்தால் இவர்கள் புதிய செயல்களை துவங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதுவே சிம்ம ராசியினர் புதிய செயல்களை செய்ய அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்போது மேஷ ராசிக்காரருக்கும் சிம்ம ராசிக்காரருக்கும் ஒத்துப் போகுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். இதற்காகத்தான் இரண்டு ராசிகள் இடையே திருமணம் செய்யும்போது ராசி பொருத்தம் பார்க்கப்படுகிறது.
வசிய பொருத்தம் கொண்ட ராசிகள்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுடன் வசிய பொருத்தம் உள்ளது. ரிஷப ராசிக்காரர்களுக்கு கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுடன் வசிய பொருத்தம் இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் கன்னி ராசியுடன் வசிய பொருத்தம் உள்ளது. அதேபோல கடக ராசிக்கு விருச்சிகம் மற்றும் தனுசு ராசி, சிம்ம ராசிக்கு மகர ராசி, கன்னி ராசிக்கு ரிஷபம் மற்றும் மீன ராசி, துலாம் ராசிக்கு மகரம், விருச்சக ராசிக்கு கடகம் மற்றும் கன்னி, தனுசு ராசிக்கு மீனம், மகர ராசிக்கு கும்பம், கும்ப ராசிக்கு மீனம், மீனம் ராசிக்கு மகரம் போன்ற ராசிகளுடன் வசிய பொருத்தம் அமைந்துள்ளது.
இந்த வசிய பொருத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளது. அவை உத்தமம் மற்றும் மத்திம. அதாவது ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமாக இருந்தால் மத்திம பொருத்தம் என்றும் பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக இருந்தால் உத்தமம் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக மேஷ ராசி பெண் சிம்ம ராசி ஆண் அல்லது விருச்சிக ராசி ஆணுக்கு வசியமாக இருந்தால் அது உத்தமம். திருமணத்தில் இது நூறு சதவீதம் பொருத்தமாக இருக்கும்.
மேலும் படிக்க: புது வீடு வாங்கப்போறீங்களா? இந்த வாஸ்து குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்
வசிய பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தால் என்ன ஆகும்?
பத்து திருமண பொருத்தங்களில் முக்கியமான ஒரு பொருத்தம் இந்த வசிய பொருத்தம். ஆனாலும் இந்த வசிய பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. பொதுவாக பெண் ராசியை வைத்து தான் இந்த வசிய பொருத்தம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்களில் மீதம் உள்ள எல்லா பொருத்தங்களும் இருந்து இந்த வசிய பொருத்தம் இல்லை என்றாலும் தாராளமாக திருமணம் செய்யலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation