ஜோதிடம் என்பது ஒரு சாஸ்திரம். இன்னும் சரியாகச் சொன்னால் அது ஒரு வகையான கணக்கு. இந்த கணக்கானது மனிதன் பிறக்கும் பொழுது எந்த நேரம், எந்த இடத்தில் பிறக்கின்றான் என்ற தகவலை வைத்து அவனுடைய வாழ்நாள் அட்டவணையாக தயார் செய்து கொடுக்கப்படும் கணிதமே ஜோதிடம். ஜோதிடம் என்பது ஒரு அழகான கலை ஆகும். ஆய கலை 64ல் ஜோதிடமும் ஒரு வகையான கலை. இந்த கலையை நாம் தெரிந்துகொள்வது நல்ல விஷயம். ஜோதிடத்தை பொறுத்தவரை அதை படிக்கும் போது அதன் மீதான நம்பிக்கை நமக்கு அதிகரிக்கும். ஜாதகம் என்பது நம் வாழ்க்கையில் எங்கெல்லாம் தடை, முட்டுக்கட்டை ஏற்படுகிறதோ அங்கிருந்து வெளியேறுவதற்கு வழி தெரியாமல் சிரமப்படும் போது மீள்வதற்கான ஒரு மார்க்கத்தை காட்டக் கூடியதாக அமைந்திருக்கிறது.
எத்தனை முறை ஜாதகம் பார்க்கலாம் ?
வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை மாறி வந்தால், மருத்துவ காரணங்களால் உடல் பாதிக்கப்படும் போது நமக்கு ஜாதகம் பார்க்கலாம் என்ற எண்ணம் வரும். வாழ்க்கையில் கடினமான சூழல்களை எதிர்கொள்ளும் போது அல்லது தேவைப்படும் நேரத்தில் ஜாதகம் பார்ப்பது நல்லது. இந்த விஷயத்தை அனைத்து ஜோதிடர்களுமே ஏற்பார்கள்.
எப்போது ஜாதகம் பார்க்கலாம் ?
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதப்படுகிறது. அப்போது அந்த குழந்தையின் நட்சத்திரம், ராசி, லக்னம் மற்றும் வாழ்க்கை அமைப்பை கணக்கு போட்டு ஒரு சின்ன நோட்டில் எழுதிக் கொடுப்பார்கள். அதன் பிறகு அந்த நோட்டை தனியாக வைத்து விடுங்கள். இதுவே பெண் குழந்தையாக இருந்தால் சடங்காகுதல் நேரத்தை வைத்து ருது ஜாதகம் எழுதலாம்.
குழந்தையின் உயர்கல்வி, வெளிநாட்டு வேலை தொடர்பான விஷயங்களின் போது எடுத்து பார்க்கலாம். பெண் குழந்தைகளை பொறுத்தவரை திருமணத்தின் போது ருது, பிறந்த ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்க்கலாம்.
இதன் பிறகு குழந்தை பிறந்துவிட்டால் ஜாதகம் பார்க்க தேவையில்லை. ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, விரதம் இருத்தல், சிகிச்சை எடுத்தும் கருத்தரித்தலில் பிரச்சினை நீடித்தால் ஜாதகம் எடுத்து பார்க்கலாம்.
சில நேரங்களில் நோய்கள் நம்மை விட்டு விலகவே விலகாது. தொடர்ந்து சிகிச்சை எடுத்தாலும் குணமடையாது. இது போன்ற நேரங்களில் நோயின் தாக்கத்தில் இருந்து வெளிவர ஜாதகம் பார்த்து என்ன பரிகாரம், வழிபாடு செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளோம், அடிமேல் அடி விழுந்து கொண்டே உள்ளது, என்ன செய்வது என தெரியவில்லை, அன்றாட உணவிற்கே வழியில்லை என்றால் ஜாதகம் பாருங்கள்.
நாம் ஒரு பாதையில் நடக்கிறோம். குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு பாதை இல்லை. எங்கே செல்லலாம் ? அடுத்தக்கட்ட நகர்வு பற்றி தெரியாத போது ஜாதகம் பார்த்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
மாதம் ஒரு முறை அல்லது அடிக்கடி ஜாதகம் பார்த்து வாழ்க்கையை நடத்துவது நன்றாக இருக்காது. இதையெல்லாம் மீறி நாம் நம்பிக்கையுடன் தெய்வ வழிபாடு செய்து கர்ம வினைகளை குறைக்கலாம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இறைவன் வகுத்து வைத்திருக்கிரார். நாம் ஜாதகம் பார்க்கவில்லையென்றாலும் அவர் நமக்கு நல்வழியை காட்டுவார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation