பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த நேரத்தை சரியாக குறிப்பிட்டு எழுதப்படுவது ஜனன காலம் ஜாதகம். பெண் குழந்தை பிறந்தால் ஜனன கால ஜாதகத்தோடு பூப்பெய்திய நேரத்தை வைத்து ருது ஜாதகம் எழுதப்படுகிறது. ருது ஜாதகம் என்பது ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையில் பெரியவள் ஆகக்கூடிய நேரம் ஆகும். ஒரு பெண்ணின் திருமணத்தையும், புத்திர பாக்கியத்தையும், கணவனோடு சேர்ந்து வாழக்கூடிய யோகத்தை சொல்வது ருது ஜாதகம். பெண் பூப்பெய்துதலில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. வீட்டில் ஒரு பெண் பெரியவள் ஆகும் போது குடும்பம் நல்ல வளர்ச்சியை காணக் கூடும், வீட்டில் துஷ்ட சக்தியை அழிக்க கூடும்.
இந்த நாட்களில் பெண் பூப்படைந்தால் எதிர்காலத்தில் அவளது சொந்த வாழ்க்கை பாதிக்கப்படும். ருது ஜாதகத்தை பலரும் முக்கியமாக கருதாமல் இருப்பதற்கு பெண் பூப்படைந்த நேரத்தை சரியாக கணக்கிட முடியாததே. சிறுவயதில் பூப்படைதல் பற்றி புரிதல் இல்லாத சிறுமிக்கு தான் எப்போது பூப்படைந்தேன் என்று சரியாக தெரியாது. தூங்கும் நேரத்தில் பூப்படைந்தால் யாராலும் நேரத்தை தெரிந்து கொள்ள இயலாது.
இயல்பாக சிறுமிகளின் ருது காலம் பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்பு தொடங்கும் 2 மணியில் இருந்து 6 மணி வரை என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுமி மற்றும் அவளது தாய்க்கு பூப்படைந்த நேரம் தெரிய வாய்ப்பில்லை. கணிக்க முயன்றாலும் ருது ஜாதகம் துல்லியமாக இருக்காது. நாள் மட்டுமே தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிங்க எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும் ? எப்போது பார்க்க கூடாது ?
அக்காலத்தில் பிறந்த பலருக்கு ஜாதகம் எழுதப்பட்டு இருக்காது. ஏனென்றால் மருத்துவமனையில் குழந்தை பிறக்கும் நேரத்தை பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்காக சரியான நேரத்தை எழுதி தருகிறார்கள். இதை கொண்டு குழந்தையின் ஜாதகம் எழுதப்படுகிறது. பிறப்பு ஜாதகம் எழுதாத அந்தக் காலத்தில் ருது ஜாதகம் திருமண பொருத்தத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
இக்காலத்தில் ஜனன கால ஜாதகத்தில் குழந்தையின் கல்வி, திருமணம், புத்திரம், எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதால் ருது ஜாதகம் தேவையில்லை. பூப்படைந்த நேரம் சரியாக தெரியாத போது அதை கொண்டு ஜாதக பலன் பார்ப்பதும் தவறு.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]