முடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை பயன்படுத்துவது புது அல்ல. பழங்காலத்திலிருந்தே ஆரோக்கியமான மற்றும் வலுவான முடிக்கு பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் ஒட்டுமெத்த முடி வளர்ச்சியை மேம்படுத்த பங்களிக்கின்றன. மேலும் கறிவேப்பிலை முடி வளர்ச்சியை புதுப்பிக்கவும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. நீங்கள் முடி உதிர்தல், பொடுகு அல்லது முடி தொடர்பான ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டாலுக்கு கறிவேப்பிலை பயன்படுத்தலாம். நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய கறிவேப்பிலை முடி சீரம் செய்முறையை எப்படி என்பதை பார்க்கலாம்.
Curry Leaves Water: ஒரு கிளாஸ் கொதிக்க வைத்த கறிவேப்பிலை தண்ணீரில் இருக்கும் ஓராயிரம் நன்மைகள்
DIY கறி இலைகள் முடி சீரம் செய்முறை
- கறிவேப்பிலை இழைகளை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். இரண்டு முறை தண்ணீரில் கழிவி எடுத்துக்கொள்ளவது சிறந்த முறையாகும்.
- ஒரு பிளெண்டரை எடுத்து கறிவேப்பிலை அனைத்தையும் மிக்ஸிக்குள் போடவும்.
- பிளெண்டரில் சில துண்டுகள் நறுக்கிய இஞ்சி மற்றும் ஒரு சிறிய கப் தண்ணீர் சேர்க்கவும்.
- கெட்டியான நிலைத்தன்மை வரும் வரை பொருட்களை நன்கு அரைக்கவும்.
- ஒரு புதிய கிண்ணத்தில் திரவத்தை வடிகட்ட எடுத்துக்கொள்ளவும்.
- இரண்டு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் மற்றும் அரை எலுமிச்சையை கிண்ணத்தில் பிழிந்து நன்றாக கலக்கவும்.
- இந்த கலவையை ஒரு புதிய ஸ்ப்ரே பாட்டிலில் மாற்றி கொள்ளவும்.
- இப்பொழுது கறிவேப்பிலை சீரம் பயன்படுத்த தயாராக உள்ளது.
- நீங்கள் இந்த சீரம் இரண்டு வாரங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமித்து பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை முடி சீரம் பயன்படுத்தும் முறை
கறிவேப்பிலை சீரத்தை முடிக்கு நேரடியாக உச்சந்தலையில் தெளிக்கலாம் அல்லது ஒரு பருத்தி பந்தைப் பயன்படுத்தி உச்சந்தலையில் தடவலாம்.
சீரம் தடவிய பின் உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
தலைமுடியைக் கழுவுவதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள்.
மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்குத் தக்காளி கொடுக்கும் கேரண்டி... மறக்காமல் இந்த 4 வழிகளில் ட்ரை பண்ணுங்கள்
உங்கள் முடியின் தரம் மற்றும் பிரச்சனைகளைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த சீரம் பயன்படுத்தலாம். கடுமையான பயன்பாட்டிற்குப் பிறகு 30 முதல் 45 நாட்களில் மாற்றத்தை உணர்வீர்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation