அமோக விளைச்சலுக்கு பஞ்சகவ்யம் பயன்படுத்துங்க; பயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்

பஞ்சகவ்யம் என்றால் என்ன ? விவசாயத்தில் பஞ்சகவ்யத்தின் பயன்கள் என்ன ? பஞ்சவ்யம் தயாரிப்பு முறை, பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் பெரும்பாலான விவசாய பெருமக்கள் பஞ்சகவ்யம் பயன்படுத்துகின்றனர்.
image

பொதுவாக பஞ்சகவ்யம் என்பது நாட்டு மாட்டில் இருந்து கிடைக்ககூடிய 5 பொருட்களை வைத்து செய்யக்கூடியது. இந்த பஞ்சகவ்யம் விவசாயக் களத்தில் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழார் பஞ்சகவ்யத்தின் பயன்களை ஒவ்வொரு கிராம விவசாயிகளிடமும் எடுத்துக் கூறி இருக்கிறார். பஞ்சகவ்யத்தை எல்லா பயிர்களுக்கும் தெளிப்பு முறையில் பயன்படுத்தலாம். விவசாயத்தில் பஞ்சகவ்யம் ஈடுபொருளாக பார்க்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தை செய்யும் பலரும் பஞ்சகவ்யம் உபயோகிக்கின்றனர்.

panchagavyam

பஞ்சகவ்யம் செய்ய தேவையானவை

  • நாட்டு மாட்டு சாணம்
  • கோமியம்
  • பால்
  • புளித்த தயிர்
  • வாழைப் பழம்
  • தேங்காய் தண்ணீர்
  • இளநீர்
  • நாட்டு சர்க்கரை
  • கடலை புண்ணாக்கு

பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை

  • 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார் செய்வதற்கு 30 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் ட்ரம் அல்லது சிமெண்ட் தொட்டி பயன்படுத்தவும்.
  • நாட்டு மாடு சாணம் 5 கிலோ, கோமியம் 3 லிட்டர், காய்ச்சாத பால் இரண்டு லிட்டர், நான்கு நாள் புளித்த தயிர் 2 லிட்டர், 12 கனிந்த வாழைப்பழம், முதிர்ந்த தேங்காய் தண்னீர் 2 லிட்டர், இளநீர் 2 லிட்டர், நாட்டு சர்க்கரை ஒரு கிலோ, ஒன்றரை கிலோ கடலை புண்ணாக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
  • குறிப்பு : தேங்காய் தண்ணீரை 4 நாட்கள் இறுக்கமான பாத்திரத்தில் காற்று புகாமல் வைத்தால் புளித்துவிடும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முன்பாக கடலை புண்ணாடு ஒன்றரை கிலோவை அதே அளவிலான தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.
  • முதலில் 5 கிலோ மாட்டு சாணத்தை இரண்டு லிட்டர் கோமியத்தில் கைகளால் கரைக்கவும். 12 வாழைப்பழங்களை பிசைந்து சேர்க்கவும்.
  • அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு நீள குச்சியால் கலக்கவும். இதன் பிறகு துணி வைத்து தொட்டியை மூடிவிடுங்கள்.
  • இந்த பஞ்சகவ்யம் நிழலில் வைக்கவும். வெயிலில் படக்கூடாது. 21 நாட்களுக்கு காலையும், மாலையும் திறந்து குச்சியில் வைத்து கலக்கிவிடவும்.
  • கலக்க பயன்படுத்தும் குச்சியை தினமும் கழுவிவிடுங்கள். ஏனெனில் குச்சியில் ஈ அமர்ந்து முட்டையிட்டால் அதை பஞ்சகவ்யத்தில் பயன்படுத்தும் போது புழுக்கள் வளரும்.
  • 21 நாட்களுக்கு பிறகே பஞ்சகவ்யத்தை பயிர்களில் பயன்படுத்த வேண்டும்.
  • 21 நாட்கள் கலக்க தவறினால் கருப்பு படலம் உருவாகி கெட்ட வாடை வரும்.

மேலும் படிங்க வீட்டில் கொத்து கொத்தாய் வேர்க்கடலை சாகுபடி செய்வதற்கான வழிகள்

பஞ்சகவ்யம் பயன்படுத்தும் முறை

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யத்தை கலந்து விவசாய நிலங்களில் தெளிக்கவும். இதனால் பயிர்கள் நல்ல வளர்ச்சி அடையும், விளைச்சல் கிடைக்கும்.

அதே போல விதைகளில் பஞ்சகவ்யத்தை நனைத்து நிலத்தில் விதைக்கவும். இதனால் விதைகளின் முளைப்பு தன்மை அதிகரிக்கும். 6 மாதங்கள் வரை பஞ்சகவ்யம் பயன்படுத்தலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP