மாதுளை ஒரு சுவையான பழம் மட்டுமல்ல. அதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் நிரம்பி இருக்கின்றன. உங்கள் வீட்டு தோட்டத்திலேயே மாதுளை செடிகளை வளர்ப்பது மிகவும் எளிது. நீங்கள் புதிதாக தோட்டக் கலையை தொடங்குபவராக இருந்தாலும் அல்லது அனுபவம் உள்ளவராக இருந்தாலும் சரி, சுலபமாக இதனை வளர்க்கலாம். இந்த செடிகள் சிறிது பராமரிப்பு மற்றும் சரியான சூழலுடன் சிறப்பாக வளரும். அதற்கான எளிய குறிப்புகளை பார்க்கலாம்.
மேலும் படிக்க: Chia seeds: சியா விதைகளை வீட்டிலேயே ஈசியாக வளர்க்கலாம்; இந்த 5 குறிப்புகளை மட்டும் பின்பற்றவும்
முதலில், உங்கள் பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாதுளை ரகத்தை தேர்ந்தெடுக்கவும். மாதுளை செடிகள் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் வளரக் கூடியவை. எனவே, தினமும் குறைந்தது ஆறு மணிநேரம் சூரிய ஒளி படும் இடத்தை உங்கள் தோட்டத்தில் தேர்வு செய்யுங்கள். உங்கள் பகுதியில் அதிக மழை பெய்தால், வேர் அழுகல் ஏற்படாதவாறு நல்ல வடிகால் வசதியை உறுதி செய்யவும்.
மாதுளை செடிகளை விதைகளிலிருந்து அல்லது வெட்டப்பட்ட தண்டு (cutting) மூலமாக வளர்க்கலாம். இருப்பினும், ஆரோக்கியமான செடியின் தண்டை பயன்படுத்துவது விரைவான மற்றும் நம்பகமான முறையாகும். செடியின் வேர் பரவி இருக்கும் அளவை விட இரண்டு மடங்கு அகலமாக ஒரு குழி தோண்டவும். மண்ணை வளப்படுத்த மக்கிய உரம் அல்லது நன்கு மக்கிய தொழு உரத்தை சேர்க்கவும். நாற்றை நட்டு, அதைச் சுற்றி மண்ணை மெதுவாக அழுத்தவும். இவ்வாறு நட்ட பிறகு நன்கு தண்ணீர் ஊற்றவும். ஒன்றுக்கு மேற்பட்ட செடிகளை வளர்த்தால், ஒவ்வொரு செடிக்கும் இடையில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு அடி இடைவெளி இருப்பது அவசியம்.
மேலும் படிக்க: Home garden tips: வீட்டிலேயே தோட்டம் அமைக்க விருப்பம் கொண்டவரா நீங்கள்? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
வளர்ந்த மாதுளை செடிகள் வறட்சியை தாங்கும் என்றாலும், இளம் செடிகளுக்கு தொடர்ந்து நீர் தேவைப்படும். வறண்ட காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஆழமாக நீர் பாய்ச்சவும். அதிகப்படியாக தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்கவும் ஏனெனில், அதிக ஈரப்பதம் வேர்களை சேதப்படுத்தும். செடியின் அடிப்பகுதியில் மக்கிய இலைகளை வைப்பது, மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைத்து, களைகள் வளர்வதை குறைக்கும்.
மாதுளை செடிகள் பெரும்பாலும் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை. இருப்பினும், சில சமயங்களில் பூஞ்சை தொற்றுகள் போன்றவை ஏற்படலாம். தேவைப்பட்டால், வேப்ப எண்ணெய் போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் பூக்கள் பூக்க, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை இயற்கை உரம் அல்லது மண்புழு உரத்தை இடுங்கள்.
உங்கள் செடி 2 முதல் 3 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். பழங்கள் அடர் சிவப்பு நிறமாக மாறி, கனமாக உணரும் போது அறுவடை செய்யுங்கள். சரியான பராமரிப்பு, சூரிய ஒளி மற்றும் நிதானம் இருந்தால் நீங்கள் ஆண்டு தோறும் சுவையான மாதுளை பழங்களை பெறலாம். மாதுளை வளர்ப்பது என்பது நிறைவான அனுபவம். ஒரு சிறிய முயற்சி மற்றும் தொடர்ச்சியான கவனிப்புடன் உங்கள் தோட்டக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]