herzindagi
image

எப்படிப்பட்ட புடவையாக இருந்தாலும் இரண்டே நிமிடத்தில் கட்டிமுடிக்க, இப்படி ட்ரை பண்ணுங்கள்

பெண்களுக்குப் புடவையை மடிப்பு கலையாமல் கட்ட பிடிக்கும். ஆனால் அப்படி புடவை கட்ட நேரம் எடுக்கும் என்பதால், மக்கள் புடவை கட்ட விரும்புவதில்லை. நாம் ரெடி-டு-வேர் புடவை கட்ட இந்த ஹேக்கை பயன்படுத்தலாம். 
Editorial
Updated:- 2025-02-01, 22:19 IST

தென்னிந்தியாவில் விசேஷ நாட்களில் புடவை கட்டுவது பராம்பரியமான ஒன்றாகும். அதனால்தான் பெரும்பாலும் புடவைகளை அழகான அணிந்து செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் சில நேரங்களில் நேரமின்மை காரணமாக, புடவையைச் சரியாக அணிய முடிவதில்லை. ஏனென்றால் புடவையின் மடிப்புகள் மற்றும் பல்லு அதிக நேரம் எடுக்கும். இதுபோன்ற நிலையில் புடவை அணிவதில் பல சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. இனி அந்த கவலை வேண்டாம், புடவையை 2 நிமிடத்தில் கட்டி முடிக்க சில உதவிக்குறிப்பு.

 

மேலும் படிக்க: குட்டையான கூந்தலில் இந்த அசத்தலான நான்கு 4 ஸ்டைல் தோற்றத்தை ட்ரை பண்ணி பாருங்கள்

புடவை மடிப்புகளை நன்றாக அழுத்தவும்

 

புடவையை விரைவாகக் கட்ட விரும்பினால், முதலில் அதை சரியாக அயன் செய்ய வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் சேலை சரியாகக் கட்ட முடியும். நீங்கள் வடிவமைக்க விரும்பும் விதத்தில் முந்தானை பகுதியை அயன் செய்து கொள்ளவும். சேலையின் கீழ் பகுதியிலும் இதுபோல் படித்து வடிவமைத்துக்கொள்ளவும். இப்படி செய்வது உங்களுக்கு எளிதாக இருக்கும், அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை.

saree wear 1

 

புடவை க்ளிப் பயன்படுத்தலாம்

 

சேலையில் மிகப்பெரிய பிரச்சனை மடிப்புகளை உருவாக்குவது. இதற்கு சேலையின் மடிப்புகளை முன்கூட்டியே வடிவமைக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக சேலைக்கு பொருந்தக்கூடிய ஒரு க்ளிப்பை பொருத்தி மடிப்பை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதை பின் கொண்டு படிப்பு கலையாமல் உருவாக்கிக் கொள்ளவும். இது மடிப்புகளை எளிதாக அமைக்க உதவுகிறது.

சேலையின் பல்லுவை அமைக்கவும்

 

பல்லுவை சரியாக அமைக்கும் வகையில் சேலையின் மடிப்புகளை எடுத்துக்கொள்ளவும். பின்னர் நீங்கள் அதை பின்கள் மூலம் சரிசெய்து கொள்ளவும். இப்படி செய்வதால் சேலை கட்டும் போது பல்லு கலையாமல் இருக்கும். சேலைகளை முழுமையாக அமைத்த பிறகு ஹேங்கரில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்து புடவைகளை வைத்துக்கொள்வதால், 2 நிமிடங்களில் புடவையைக் கட்டு முடித்துவிடலாம்.

saree wear 2

 

மேலும் படிக்க:  கனமான எம்பிராய்டரி ஆடைகள் அணியும் போது மேக்கப்பில் செய்யக்கூடிய தவறுகள்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]