Secret Santa 2023: உங்களது அன்புக்குரியவர்களுக்கு கிறிஸ்துமஸ்க்கு சர்ப்ரைஸ் கிப்ட்?

கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுகளோடு, தற்போது பல அலுவலங்களில் சீக்ரெட் சான்டா நடைபெறுகிறது.

christmas santa

டிசம்பர் மாதம் ஒராண்டின் கடைசி மாதங்களாக மட்டுமில்லாமல் கொண்டாட்டத்திற்கான மாதமும் உள்ளது. கிறிஸ்துமஸ் முதல் புதிய ஆண்டின் தொடக்கமும் இம்மாதத்தில் தான். இயேசு பிறப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்துக் கொண்டாடுவது, கேக்குகள், இனிப்புகள், பரிசுகள் என கொண்டாடத்தில் இருக்கக்கூடிய சுவாரசியஸ்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதுப்போன்ற விஷயங்கள் பல இருந்தாலும் கிறிஸ்துமஸ் தாத்தா என்ற சான்டா கிளாஸ் இல்லையென்றால் இந்த பண்டிகை முற்றிலும் நிறைவுபெறாது. வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் ரகசியமாக வந்து சான்டா கிளாஸ் கொடுக்கும் பரிசிற்காகத் தூங்காமல் காத்திருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். சிறியதோ? பெரியதோ? சிவப்பு கலர் பேக்கிங்கில் என்ன இருக்கும் என்ற ஆவல் குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் அதிகம் இருக்கக்கூடும்.

christmas

இதுப்போன்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுகள் ஒருபுறம் கொடுக்கும் வழக்கத்தோடு, தற்போது பல அலுவலங்களில் சீக்ரெட் சான்டா நடைபெறுகிறது. இதற்காக உடன் பணிபுரியும் சகஊழியர்களுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறதா? இதோ உங்களுக்காகவே சில யோசனைகள் இங்கே…

மேலும் படிங்க:கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சாக்லேட் கேக்!

கிறிஸ்துமஸ்க்கான சர்ப்ரைஸ் கிப்ட் லிஸ்ட்:

  • கேகெஜட்டுகள்:கிறிஸ்துமஸ்க்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்? என்ற யோசனை உள்ளது என்றால் நீங்கள் கேஜெட்டுக்கள் வாங்கிக்கொடுக்கலாம். இன்று அனைவருக்கும் புதிய மாடல்களில் வரக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களின் மீது ஆர்வம் அதிகம் உள்ளது. எனவே லேட்டஸ்ட் டிரெண்டிங்கில் உள்ள புளூடூத், ஸ்பீக்கர்கள் அல்லது ஹைட்போன்களை நீங்கள் வாங்கிக்கொடுக்கவும். இது அவர்களுக்கு சிறந்த பரிசாக நிச்சயம் அமையக்கூடும்.
  • செடிகள்: உங்களது அன்புக்குரியவர்களின் பாசத்தைப் பெறுவதற்கு வீடுகளை அலங்கரிக்கும் செடிகளைப் பரிசாக அளிக்கலாம். செடிகள் தான் என்ற எண்ணம் வேண்டாம், இயற்கையான விஷயங்கள் எப்போதுமே? பாசிடிவ் எண்ணத்தை வரவழைக்கும்.
  • உங்களுடைய நண்பர்களில் பலர் வீடுகளில் இருந்து பணியாற்றுகிறார்கள் அல்லவா? எனவே இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கான ஓராண்டு டேட்டாக்களுக்கான சந்தாக்களை நீங்கள் பரிசளிக்கலாம். ஒருவேளை பொழுதுப்போக்கில் அவர்களது ஈடுபாடு அதிகமாக இருந்தால் நெட்பிளக்ஸ், ஹாட் ஸ்டார் போன்றவற்றிற்கு சந்தாக்களை நீங்கள் செலுத்தி அவர்களை ஆச்சரியப்படுத்தலாம்.
  • குளிர்காலத்தில் வரக்கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகையில் நாள் முழுவதும் சர்ச்சில் இருப்பார்கள். எனவே குளிருக்கு இதமாக ஸ்கார்ப், கையுறைகள், ஸ்வெட்டர் போன்றவற்றை இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு வாங்கிக்கொடுக்கவும். வீடுகளுக்குத் தேவையான அலங்காரப் பொருள்களையும் பரிசாக அளிக்கலாம்.
  • இதோடு மட்டுமின்றி வீடுகளுக்குத் தேவையான மெழுகு வர்த்திகள், இனிப்புகள், விதவிதமான கேக்குகள், அவர்களுக்குப் பிடித்த அழகுசாதனப் பொருள்களையும் நீங்கள் சீக்ரெட் சான்டாவில் கொடுக்கலாம்.
santa  gift
  • உங்களால் முடிந்தால் நீங்கள் ஸ்மார்ட் வாட்ச், கை செயின், அவர்களுக்குப் பிடித்த டிரெஸ்களை நீங்கள் வாங்கிக்கொடுக்கும் போது அன்பு பெருகக்கூடும்.
  • இதுப்போன்ற நிகழ்வுகள்,ஆண்டின் ஒரு நாள் மட்டுமில்லாது, அடுத்த வரக்கூடிய புதிய ஆண்டு முழுவதும் இந்த பரிசுகள் அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP