நவீனமாகவும், ஸ்டைலாகவும் தோற்றமளிக்க, புதிது புதிதாக பலவற்றை நாம் அடிக்கடி வாங்குகிறோம். அதே நேரத்தில், கிட்டத்தட்ட தினமும் கடைகளில் ஏதாவது ஒரு புதிய பேஷன் ஆடைகளை நம்மால் பார்க்க முடிகிறது.
தற்போது கருநீல நிற ஆடைகள் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த வகையான அடர் நிற ஆடைகள் பெரும்பாலும் இரவு நேர பார்ட்டி அல்லது விழாக்களுக்கு அணிந்துகொள்ள பொருத்தமாக இருக்கும்.
நீங்களும் ஏதேனும் விழாவிற்கு கருநீல நிற ஆடையை தேர்வு செய்ய விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதில், சில லேட்டஸ்ட் டிசைன் மற்றும் கருநீல வண்ண ஆடைகளின் வகைகளை பற்றி பார்க்கவிருக்கிறோம்.
சிக்கன்காரி உடை
இந்த வகை ஆடைகள் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும். நீங்கள் இது போன்ற ஆடையை வாங்க விரும்பினால், இவை ரூ.2000 முதல் ரூ.6000 வரை விலைகளில் விற்கப்படுகிறது.
குறிப்பு: இந்த வகை ஆடைகளை அணியும் போது, முத்து நகைகள் அணிந்தால், எடுப்பாக இருக்கும். மேலும் தலை முடியை கொண்டை போட்டு, மல்லிப்பூ வைத்து அலங்கரிக்கலாம். இது மிக அழகான தோற்றத்தை தரும்.
இதுவும் உதவலாம்- சிம்பிள் புடவைகளில் ஸ்டைலாக தெரிவது எப்படி?- இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்
வெல்வெட் லெஹெங்கா
இதேபோன்ற வெல்வெட் லெஹெங்காகள் கடைகளில் சுலபமாக கிடைக்கும். இவை ரூ.4000 முதல் ரூ.11000 வரை விலைகளில் விற்கப்படுகிறது. இந்த மாதிரி லெஹங்காவை இரவு நேர விழாக்களுக்கு அணிந்து செல்லலாம்.
குறிப்பு: இந்த வகை லெஹெங்காவுடன் கனமான பெரிய கம்மல் அணிந்துகொள்ளலாம். மேலும் இதற்கு முழு கை வைத்த பிளவுஸ் அணியலாம். தலை முடியை பின்னலிடாமல் திறந்து விடலாம்.
சீக்வின் புடவை
இந்த வகை புடவைகள் பார்ப்பதற்கு மிகவும் ராயலான தோற்றத்தை கொடுக்கிறது. இந்த வகை புடவைகள் சுமார் ரூ.2000 முதல் ரூ.4000 வரை விற்கப்படுகிறது.
குறிப்பு: இந்த வகை புடவைகளுக்கு சாடின் துணி பிளவுஸ் அழகாக இருக்கும். மேலும் இதற்கு அமெரிக்க வைர நகைகளை அணிந்து கொள்ளலாம்.
இதுவும் உதவலாம்- 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகைகள் அணிந்த காஞ்சீவரம் புடவைகளை ஸ்டைலாக அணிய செம டிப்ஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google, freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation