herzindagi
simple saree big

சிம்பிள் புடவைகளில் ஸ்டைலாக தெரிவது எப்படி?- இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்

சிம்பிள் புடவைகள் எப்போதுமே டிரெண்ட் ஆக தான் இருக்கும், மேலும் அது மிகவும் அழகாகவும் நம்மை மாற்றும்.
Editorial
Updated:- 2022-11-25, 12:00 IST

எந்த வகையான பண்டிகையாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, பார்ட்டியாக இருந்தாலும் சரி, எல்லா காலகட்டத்திலும் புடவைகளின் ஸ்டைலும், நேர்த்தியும் மாறவே மாறாது. பெரும்பாலான பெண்கள் புடவை அணிவதையே விரும்புகின்றனர். பல பெண்கள் தினமும் சேலை கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இத்தகைய சூழலில், பெண்கள் எந்த வகையான சேலையையும் அணிகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு தற்போதைய ஃபேஷன் பற்றி தெரிவதில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு பல விருப்பங்கள் இருப்பதுமில்லை. எனவே இன்று நாங்கள் உங்களுக்கு புடவையை ஸ்டைலாக கட்டுவது குறித்த சில குறிப்புகளை கூறவுள்ளோம், அதை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் டிரெண்டியாகவும் ஸ்டைலாகவும் மாறலாம்.

கோல்டன் - கருப்பு புடவை

simple saree

பசுமையான வண்ணங்களில் தங்கம் மற்றும் கருப்பு நிறம் எப்போதுமே இருக்கும். பெரிய தங்க நிற பார்டர் கொண்ட கருப்பு நிற புடவை மிகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். இந்த இரண்டு வண்ணங்களின் கலவை வித்தியாசமான ஸ்டைலை கொடுக்கும். நீங்கள் தலைமுடியை அழகாக, நேர்த்தியான கொண்டையாக போட்டால், அது உங்கள் முழுமையான தோற்றத்தையும் பிரதிபலிக்க செய்யும்.

மிகவும் நவநாகரீகமான வெள்ளை நிற புடவை

simple saree

கோடையில் பெரும்பாலும் வெள்ளை நிறம் விரும்பப்படுகிறது. வெள்ளை நிறம் மிகவும் மென்மையாகத் தெரிகிறது, இதன் காரணமாக ஒவ்வொரு பெண்ணையும் எளிதில் கவர்ந்திழுக்கிறது. வெள்ளை கலர் புடவையில் காணப்படும் இந்த கோடிட்ட டிசைன், இந்த சேலைக்கு தனி அழகு சேர்க்கிறது. மேலும், இதனை கருப்பு நிற பிளவுசுக்கு மேட்சாக அணியலாம். நீங்கள் விரும்பினால், இதனோடு இந்திய மேற்கத்திய கலாச்சார பாணி நகைகளையும் அணியலாம்.

கலர்ஃபுல் புடவை தான் லேட்டஸ்ட் டிரெண்ட்

simple saree

மாறிவரும் காலப்போக்கில், இப்போது மேற்கத்திய பெண்கள் முதல் பாரம்பரிய பெண்கள் வரை என அனைவரும் பல வண்ண நிற புடவைகளை மிகவும் விரும்புகிறார்கள். நீங்களும் பலவண்ண புடவைகளை முயற்சி செய்யலாம். நீங்களும் இந்த தோற்றத்தை முயற்சி செய்து பார்த்து அழகில் ஆனந்தம் கொள்ளலாம்.

லேசான கலர் புடவை

simple saree

இந்த மாதிரியான புடவைகள் ஒருபோதும் நமக்கு சலிப்பதே இல்லை. சாடின் துணியாலான இந்த புடவையை வீட்டில் மட்டுமல்லாமல், எளிமையான விழாக்களுக்கு கூட நம்மால் அணிய முடியும். இந்த வகை புடவைகளை குறைந்த நகைகளுடன் ஸ்டைல் செய்தால், அதன் தோற்றம் உங்களின் அழகை மேலும் மெருகேற்றும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: google, freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]