herzindagi
ps big

'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகைகள் அணிந்த காஞ்சீவரம் புடவைகளை ஸ்டைலாக அணிய செம டிப்ஸ்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அணிந்து வரும் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளை எப்படி நாமும் அழகாக அணியலாம் என்பதை அறிவோம்.
Editorial
Updated:- 2022-10-22, 14:21 IST

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு மற்றுமோர் முக்கிய காரணம், நடிகைகள் அணிந்துவந்த தனித்துவமிக்க, ஸ்டைலான உடைகளும் தான்.இவை பெண்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகைகளின் தோற்றங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டதாகவும் மிகவும் அழகாகவும் இருந்தது. குந்தவை, நந்தினி, பூங்குழலி, வானதி போன்ற கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப பெண்கள் பலரும் உடை அணிந்து அந்த புகைப்படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண்கள் தங்களுடைய அழகில் சமரசம் செய்ய விரும்புவதில்லை. நீங்களும் அப்படிப்பட்ட பெண்ணாக இருந்தால், நாங்கள் சொல்லும் இந்த டிப்ஸ் மூலம் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வரும் நடிகைகளின் அழகிய தோற்றத்தை ஒத்த நீங்களும் இருக்கலாம்.

குங்கும சிவப்பு நிற காஞ்சீவரம் புடவை

ps

உங்களுக்கு சிவப்பு நிறம் பிடிக்குமா? நீங்களும் நந்தினி கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராய் போல அழகாக இருக்க வேண்டுமா?

டிப்ஸ்: இந்த தோற்றத்தை முழுமையாக்க, நீங்கள் நேர்த்தியான கொண்டை போட்டு, தலைமுடி அலங்காரத்தை செய்யலாம். அதோடு மல்லிகை பூவையும் வைத்தால் கூடுதல் அழகுடன் இருப்பீர்கள்.

மஞ்சள் நிற காஞ்சீவரம் புடவை

ps

இந்த வகை புடவை கண்களை கவரும் வண்ணம் இருக்கும். இந்த தோற்றத்தில் வானதி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சோபிதா அவர்கள் லேசாகவே மேக்கப் போட்டுள்ளார். மேலும், இவருக்காக வித்தியாசமான, தனித்துவமிக்க மூக்குத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டிப்ஸ்: இத்தகைய புடவைக்கு நீங்கள் முத்து நகைகளைப் பயன்படுத்தலாம். மேலும், நீங்கள் விரும்பினால், சோக்கர் நெக்லஸுடன் சேர்த்து ராணி ஆரமும் அணியலாம். உங்கள் முகத்திற்கு ஏற்றவாறு காதணிகளை தேர்வு செய்யுங்கள்.

வித்தியாசமான ஸ்டைலில் மற்றும் கலரில் காஞ்சீவரம் புடவை

ps

இந்த நிறம் பார்க்கவே மிகவும் தனித்துவமாகவும் அழகாகவும், கம்பீரமாகவும் தெரிகிறது. இந்த தோற்றத்தில் மிகவும் பட்டையான, பெரிய நெற்றிச்சுட்டியை திரிஷா அவர்கள் தேர்வு செய்துள்ளார். மேலும் மிகவும் நேர்த்தியான, வேலைபாடுகள் நிறைந்த நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டிப்ஸ்: இந்த வகை காஞ்சீவரம் புடவையுடன் கனமான ஜிமிக்கி கம்மல்களை அணிய முயற்சி செய்யலாம். மேலும், மேக்கப்பை லேசாக போட்டால் மட்டுமே, உங்கள் தோற்றம் மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

மங்களகரமான பச்சை நிற காஞ்சீவரம் புடவை

ps

சோபிதாவின் இந்த தோற்றம் மிக கம்பீரமாக இருக்கிறது. இதில் டியூப் ஸ்டைல் பிளவுஸுடன் சேலையை அழகாக கட்டியுள்ளார்.

டிப்ஸ்: இந்த தோற்றத்திற்கு, உங்கள் கைகளில் கனமான வளையலை போடலாம். தலை முடியை பின்னாமல், அப்படியே விடலாம்.

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள நடிகைகளின் தோற்றம் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதை முயற்சி செய்து பாருங்களேன்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]