herzindagi
face tan big image

Remove sun Tan: முகத்தில் ஏற்படும் கருமையை நீக்கி உடனடி பொலிவை தரும் சூப்பர் டிப்ஸ்

முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி உடனடி பொலிவை தர வீட்டு இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தால். 
Editorial
Updated:- 2024-04-05, 18:17 IST

முகத்தை சுத்தமாக வைத்திருக்க பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் வெயிலில் வெளியே சென்றவுடன் சருமம் கருமையாக மாறத் தொடங்குகிறது. இதனால் தோலின் உண்மையான நிறம் மறைந்துவிடும். ஆனால் அதற்கு சரியான சிகிச்சையை வழங்குவது மிகவும் முக்கியம் இல்லையெனில் அது சருமத்தின் பளபளப்பை நீக்கிவிடும்.

மேலும் படிக்க: கோடைக்காலத்தில் ஏற்படும் சரும அரிப்புகளை ஈஸியா கையாளலாம்!!

கருமையை நீக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியத்தைப் பற்றி பார்க்கலாம். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமையை எளிதாக நீக்கி முகத்தில் உடனடி பொலிவைப் பெறலாம். இவற்றை முகத்தில் பூசுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.

முக கருமையை நீக்கும் பொருட்கள்: 

  • அலோ வேரா ஜெல்
  • ரோஜா இதழ்கள்
  • முல்தானி மிட்டி

முல்தானி மெட்டி பலன்கள் 

Multani Mitti  inside

  • முல்தானி மெட்டியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் சருமத்தில் இருக்கும் பதனிடுதலை நீக்க உதவுகிறது.
  • முக தோலில் இருக்கும் கறைகள் மற்றும் பருக்களின் புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
  • முல்தானி மெட்டி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ரோஜா இதழ்களை முகத்தில் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள் 

rose petal  inside

  • சருமத்தின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.
  • சரும செல்களை உள்ளிருந்து சரி செய்து இழந்த பொலிவை மீண்டும் கொண்டு வர உதவுகிறது.
  • ரோஜா இதழ்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவினால் என்ன நடக்கும்?

aleo vera inside

  • கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-பி ஆகியவை சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
  • இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
  • இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தின் அனைத்து வகையான தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

முக கருமையை நீக்கும் வீட்டு வைத்தியம்

  • முதலில் 1 முதல் 2 ரோஜா பூக்களை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்திக்கொள்ளுங்கள்.
  • அதன் பின் 2 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் கற்றாழை இலைகளை சேர்க்கவும்.
  • இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை ஒரு பிரஷ் உதவியுடன் முகத்தில் தடவவும்.
  • முகத்தில் சுமார் 20 நிமிடங்கள் விடவும்.
  • இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் பருத்தி உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும்.
  • நீங்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சூப்பரான 10 டீப்ஸ்

 முகத்தில் உள்ள கருமையை நீக்கம் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த கட்டுரையை மறக்காமல் பகிரவும். மேலும் இது போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]