வீட்டிலேயே செய்யக்கூடிய பசுமை விநாயகர்... ஆத்ம திருப்தி பெறலாம்...

வீட்டில் குழந்தைகளோடு சேர்ந்து பசுமை விநாயகர் செய்து வழிபடுவதற்கான வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்....

how to make eco friendly ganesha

பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு களிமண் சிலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு வண்ண வண்ண நிறங்களில் ரசாயன சிலைகள் தயாரிக்கப்பட்டன. ரசாயன சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது மண் அரிப்பு ஏற்படுவதாக கூறி அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் களிமண் சிலைகளை மீண்டும் வழிபாட்டிற்கு பயன்பட தொடங்கியுள்ளனர். நாம் சிறு வயதில் நீர்நிலைகளில் கிடைக்கும் களிமண்ணை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்திருக்கிறோம். அப்படி செய்யும் போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆற்றில் மண், களிமண் எடுப்பதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதால் நாம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பசுமை விநாயகரை தயாரிக்கலாம். குழந்தைகளுடன் சேர்ந்து இந்த விநாயகரை செய்து வழிபடுங்கள்.

ganesha idol making

பசுமை விநாயகர் செய்யத் தேவையானவை

  • கோதுமை / மைதா மாவு
  • மஞ்சள்
  • பால்
  • சர்க்கரை
  • தண்ணீர்
  • குங்குமம்
  • திருநீறு
  • தீக்குச்சி
  • மிளகு
  • பூ நூல்
  • பாக்கு மட்டை தட்டு
  • பலகை
  • அருகம் புல்
  • எருக்கம் பூ

பசுமை விநாயகர் செய்முறை

  • முதலில் பலகை நன்கு கழுவி கோலம் போடுங்கள். அதன் மீது பாக்கு மட்டை தட்டு வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, முக்கால் கப் மஞ்சள்... அதே அளவிற்கு பால், ஒன்றரை ஸ்பூன் சர்க்கரையை மிக்ஸியில் பொடிதாக அரைத்து அனைத்தையும் நன்றாக சேர்க்கவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து பத்து நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
  • கொஞ்சமாக மாவு எடுத்து கால் பூரி சைஸிற்கு உருட்டவும்.
  • பாக்கு மட்டை தட்டின் நடுப்பகுதியில் இதை வைத்த பிறகு கால் மேல் கால் போட்டபடி விநாயகரை உருவாக்கவும்.
  • வயிற்று பகுதியை உருவாக்க லட்டு சைஸிற்கு ஒருண்டை பிடித்திரு கால்களுக்கு இடையில் வைக்கவும்.
  • அடுத்ததாக முகம் செய்ய பாதி லட்டு சைஸிற்கு உருட்டி வயிற்று பகுதி மேல் வைக்கவும்.
  • இரண்டு கைகளை தயாரித்து அழுத்தமாக ஒட்டவும். விநாயகரின் வலது கையில் ஸ்வஸ்திக்கும் இடது கையில் மிக சின்னதாக லட்டு செய்து வையுங்கள்.
  • தும்பிக்கையை தலையின் நடுப்பதியில் ஒட்டி வலது புறமாக சுழித்துவிடவும்.
  • இடுப்பில் அரைஞாண் கயிற்றை பாம்பு வடிவில் சுற்றியும் கழுத்தை சுற்றி பூநூல் மாட்டிவிடவும்.
  • ஒட்டும் போது மாவு காய்ந்ததாக தெரிந்தால் ஒரு சொட்டு தண்ணீர் தொட்டு வைக்கவும்.
  • தலைக்கு கூம்பு வடிவ கிரீடம் செய்யுங்கள். 5-7 எருக்கம் பூ கோர்த்து மாலை அணிவிக்கவும்.
  • ஒரு தீக்குச்சியை பாதியாக உடைத்து வலது பக்கமும், மற்றொரு குச்சியை இடது பக்கமும் கொம்புகளாக வைக்கவும்.
  • மகாபாரதத்தை தனது மூக்கு கொம்பை உடைத்து விநாயகர் எழுதியதால் இப்படி செய்கிறோம்.
  • உடைந்த தீக்குச்சி கொண்டு விநாயகரின் தும்பிக்கையில் கோடு, கை மற்றும் கால்களில் விரல்கள் செதுக்கவும்.
  • கண்களுக்கு மிளகு பயன்படுத்துங்கள். மூஷிக வாகனமான எலியை குழந்தையை செய்யச் சொல்லுங்கள்.
  • தலைக்கு பின் அருகம்புல் வைத்தால் பசுமை விநாயகர் வழிபாட்டுக்கு தயார்.
  • இப்படி செய்வதனால் குழந்தைகளுக்கு பக்தியையும் கடத்த முடியும் ஆத்ம திருப்தியையும் பெற முடியும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஹிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP