சாம்பார் மற்றும் பருப்பு குழம்பு சமைக்க, வடை சுடுவதற்கு, தாளிப்புக்கு உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவை அவசியம். இவற்றை நம் அம்மா வீட்டில் இறுக்கமான பாத்திரங்கள், பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைப்பார்கள். அதன் பிறகு வண்டுகள் ஊறும், பூஞ்சை தாக்குதலால் நிறம் மாறும் அல்லது ஊசிப் போன வாசனை அடிக்கும். இவை பதத்து போகாமல் பாதுகாப்பது சற்று கடினமாகத் தோன்றலாம். எனவே பருப்பு வகைகளை எவ்வாறு முறையாக சேமித்து வைப்பது என இந்த பதிவில் பார்ப்போம்.
பருப்பு வகைகளை சேமிப்பதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று, அவற்றை காற்று புகாத பாத்திரங்களில் வைத்திருப்பது. பருப்பு வகைகள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சிவிடும். இதனால் பருப்புகள் கெட்டுப் போக வாய்ப்புண்டு. காற்று புகாத பாத்திரங்களில் சேமித்தால் பருப்பு வகைகள் ஈரப்பதமாகாமல் தடுக்கலாம். அதே நேரத்தில் புதிய பருப்புகள் போலவே இருக்கும். பருப்பு வகைகளை காற்று புகாதவாறு மூடி வைக்க கண்ணாடி ஜாடிகள், இறுக்கமான பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.
பருப்பு வகைகளை நேரடி சூரிய ஒளி மற்றும் ஈரப்பதம் பாதிக்கலாம். எனவே உலர்வான இடத்தில் பருப்பு வகைகளை சேமிக்கவும். வெப்பம் மற்றும் ஈரப்பதம் பருப்பு வகைகள் வேகமாக கெட்டுப்போகவும் பூச்சிகளை ஈர்க்கவும் வழிவகுக்கும். அடுப்பிற்கு அருகிலும், வெளிச்சம் நேரடியாக பரும் ஜன்னல்களின் அருகிலும் பருப்பு வகைகளை வைக்காதீர்கள்.
இப்போதெல்லாம் பிளாஸ்டிக் டப்பாவிலும், சீலிடப்பட்ட பைகளில் பருப்பு வகைகளை சேமிப்பது நல்லது. சீலிடப்பட்ட பை காற்று புகுவதை தடுக்கின்றன. இதனால் பருப்பு கெட்டுப்போவது தடுக்கப்படுகிறது மற்றும் பருப்பு நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். அதே போல பருப்பின் சத்துகளும் குறையாது.
அந்த காலத்தில் அரிசி மூட்டைகளை சுற்றி வேப்பிலை போட்டு வைத்திருப்பார்கள். இந்த வேப்ப இலைகள் இயற்கையான பூச்சி விரட்டியாகும். இதை நாம் பருப்பை சேமித்து வைக்கவும் பயன்படுத்தலாம். பருப்பு சேமிக்கும் பாத்திரங்களை சுற்றி வேப்ப இலைகளை போட்டு வைப்பது பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். எந்த செலவும் இன்றி பருப்பு வகைகளை சேமிக்க இது மிகவும் எளிதான வழி.
பருப்பு வகைகளை புதிது போல் வைக்கவும், பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் பூண்டு பயன்படுத்தலாம். பருப்பு இருக்கும் பாத்திரத்தை சுற்றி உரிக்காத பூண்டு வைக்கவும். பூண்டின் நிறம் மாறினால் அவற்றை மாற்றவும். இந்த எளிய வழியால் பருப்பு மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]