பல நேரங்களில் நம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இல்லை. காரணம் அதன் சுவை ஜங்க் உணவு போல இருக்காது என்று நினைக்கிறார்கள். ஆரோக்கியமான உணவுகளை சுவையாக வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைகள் ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுவார்கள். கோதுமை அவல் மாற்று காய்கறிகள் சேர்த்து ஒரு வித்தியாசமான இட்லி ரெசிபி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வெயிலில் காயவைத்த முளைகட்டிய கோதுமையை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அவலை கல் நீக்கி நன்கு சுத்தம் செய்து நீர்விட்டு கழுவி வடித்து சிறிது நேரம் ஊறவிடவும். ஊறிய அவலை மிக்ஸியில் அரைத்து வைத்த பிறகு தேவையான நீரில் அரைத்த கோதுமை அல்லது கோதுமை அவலையும் கலந்து தேங்காய் துருவல், கருப்பு உப்பு கலந்து நன்கு கிளற வேண்டும். இந்த கெட்டியான மாவை இட்லி தட்டின் மேல் மெல்லிய பருத்தி துணி விரித்து அதற்கு மேல் இட்லி போல நிரப்பி பத்து நிமிடம் வேக விடுங்கள். 10 நிமிடம் கழித்து கெட்டியான இட்லியை துணியில் இருந்து கவனமாக உடைத்து விடாமல் எடுத்து, இந்த ஆரோக்கியமான சுவையான கோதுமை போஹா இட்லியை பரிமாறலாம். பலவகை அவல்கள் கலந்தும் இந்த இட்லி தயாரிக்கலாம். இதுவே வெஜிடபிள் இட்லி தேவை என்றால் மாவுடன் காரட் துருவல், வெள்ளரித் துருவல், கோஸ் துருவல் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான வெஜிடபிள் இட்லி ரெடி.
இந்த இட்லியுடன் யாம் சட்னி, தேங்காய்சட்னி, மல்லிச்சட்னி, மல்லித்துவையல், தக்காளிச்சட்னி சேர்த்து சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு மாலை ஸ்னாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம். மேலும் இதில் கோதுமை உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த இட்லியை தாராளமாக சாப்பிடலாம்.
மேலும் படிக்க: வீட்டிலேயே சுவையான பாகற்காய் ஊறுகாய் செய்து பாருங்க!
நம் தினசரி உணவில் கோதுமையை சேர்த்து வந்தால், ரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். அதே போல கோதுமையில் புற்றுநோயை தடுக்க உதவும் வைட்டமின் ஈ சத்து, நார்ச்சத்து மற்றும் செலினியம் அதிக அளவு உள்ளது. குறிப்பாக இந்த கோதுமை அவலில் 15 சதவீதம் நம் உடலுக்கு தினசரி தேவைக்கான வைட்டமின் ஈ சத்தும், 10 சதவீதம் ஃபோலேட் சத்தும் அடங்கியுள்ளது. நட்ஸ் வகைகளை சாப்பிட்டால் அலர்ஜி இருப்பவர்கள் அதற்கு பதிலாக இந்த கோதுமை அவல் சாப்பிட்டு வரலாம். இந்த கோதுமை அவலை பால் சர்க்கரை சேர்த்து கிளறி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். இல்லை என்றாலும் மிக்ஸியில் அரைத்து மில்க் ஷேக் ஆகவும் குடிக்கலாம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]