Tiruvannamalai Temple : நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோயில் சிவ பக்தர்களால் தமிழகத்தில் தரிசிக்கப்பட வேண்டிய ஆன்மிக பேரின்ப தலமாகும். 

Tiruvannamalai Temple History

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில் என்றழைக்கப்படும் அருணாசலேசுவரர் கோயில் தென் இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலை 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இந்த அண்ணாமலையார் கோயில் சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால வரலாறு தெரிவிக்கிறது. சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், குறுநில மன்னர்கள் என ஏராளமானோரின் பங்களிப்பில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. தென் இந்தியாவின் கட்டிடக் கலை மற்றும் சிற்ப கலைக்கு சிறந்த சான்றாக இக்கோயில் விளங்குகிறது.

கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அதன் பிறகு போசள அரசர்கள், விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு அதன் பிறகு ஆட்சி செய்த அரசர்கள் மூலவர் கருவறை, மண்டபங்கள், பல தெய்வங்களின் சந்நதிகள், கோபுரங்கள் ஆகியவற்றை கட்டியுள்ளனர். கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுரத்தின் உயரம் 217 அடியாகும். இது தமிழகத்தின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.

Tiruvannamalai temple Nandi

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலில் 100க்கும் மேற்பட்ட சந்நதிகள், ஆயிரக்கணக்கான சிற்பங்கள், 450 கல்வெட்டுகள் இருக்கின்றன. செப்புத் திருமேனிகள், தீர்த்தக்குளங்கள், வானுயர்ந்த கோபுரங்களின் அண்ணாமலையார் கோயிலின் சிறப்பம்சங்கள் ஆகும். இவை எல்லாவற்றையும் விட லிங்கமே மலையாக இருப்பது திருவண்ணாமலையின் சிறப்பாகும்.

மூலவர் : அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்

அம்மன் : உண்ணாமுலையாள்

பெயர் பின்னணி : சிவபெருமானின் பல பெயர்களில் ஒன்று

திறப்பு : காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை

மேலும் படிங்கஅயோத்தியில் காண வேண்டிய முக்கிய ஆன்மிக தலங்கள்

பத்தாம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் திருவண்ணாமலை கோயில் கட்டியதன் பின்னணி, யாரெல்லாம் கோயிலை கட்டினர் போன்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அண்ணாமலையார் கோயில் குறித்த உண்மைகள் அங்கிருந்த கல்வெட்டுகள் வழியாக உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டன.

Lord Ganesha in Temple

அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு 14 கிலோ மீட்டருக்கு கிரிவலம் நடந்து சென்றால் நினைத்து நடக்கும் என கோடிக்கணக்கான பக்தர்கள் நம்புகின்றனர். கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன. கிரிவலம் செல்லும் போது இந்த லிங்கங்ளை தரிசிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஈடுக்கு பிள்ளையார் ஒன்று உள்ளது.

மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம் கொண்டாட்டங்களின் போது அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படும் விளக்குகளால் ஒட்டுமொத்த திருவண்ணாமலையுமே ஜொலிக்கும். ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவர். பக்தர்களுக்குக் கேசரி, லட்டு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தற்போது இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து 195 கிலோ மீட்டர் தொலைவில் திருவண்ணாமலை உள்ளது. திருவண்ணாமலைக்கு இரயில் பாதை கிடையாது எனவே நீங்கள் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP