herzindagi
wor

Diwali Celebration: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி!

   உலக நாடுகள்  தீபாவளி  பண்டிகையை  மகிழ்ச்சி பொங்க கொண்டாடும் மக்கள்
Editorial
Updated:- 2023-12-12, 22:34 IST

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் மிகுந்த ஆர்வத்துடனும் , உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் மரியாதைக்குரிய பண்டிகையாகும். தீபாவளி பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாடுகள்பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

 இந்தியாவின் முதன்மை பண்டிகையாகக் கொண்டாடப்படும் தீபாவளி, உலகம் முழுவதிலும் உள்ள பிற நாடுகளிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் தீபாவளி பண்டிகைக்குத் தேசிய விடுமுறை அறிவிக்கப்படுவதால் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.

இந்தியாவைப் போலவே எந்தெந்த நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதை காணலாம்.

 

மலேசியா :

மலேசியாவில் தீபாவளி பண்டிகையின்போது பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வீடுகள் தொடங்கி தெருக்கள்வரை விளக்குகளாலும், வண்ணமயமான பாரம்பரிய பொருட்களாலும் அலங்கரிக்கப்படுகின்றன.

அப்போது பல கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி பாரம்பரிய இந்திய உணவுகளையும் மக்கள் ருசிக்கின்றனர். மலேசிய மக்கள் தீபாவளி பண்டிகையை “ஹரி தீபாவளி” என்று அழைக்கின்றனர். ஹரி தீபாவளி என்றால் பசுமை தீபாவளியெனப் பொருள். ஏனென்றால் மலேசியாவில் பட்டாசுகள் வெடிக்க தடை இருக்கிறது.

 

 

இலங்கை :

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், இந்தியாவுக்கு இணையாகத் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இலங்கையில் இந்து  மதத்தைப் பின்பற்றும் மக்கள் தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபாவளி அன்று தங்களது வீடுகளில் விளக்குகள், தீபங்கள் ஏற்றிப் பூஜைகள் செய்து கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

 

அமெரிக்கா :

அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அங்கும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அங்குள்ள இந்து மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்து தீபாவளி பண்டிகையன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் மட்டுமின்றி அங்கு வாழும் பிற சமுதாய மக்களும் தீபாவளி கொண்டாடுகின்றனர். குறிப்பாக வெள்ளை மாளிகையிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

 

தென் ஆப்ரிக்கா :

தென் ஆப்ரிக்காவில் வாழும் இந்தியர்கள், தீபாவளியை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர். குறிப்பாக டர்பன் நகரில் இந்துக்கள் அதிகமாக வசிப்பதால், அங்கு மிகப்பெரியளவிற்கு கொண்டாட்டாங்கள் திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றன.

 

diwali light

 

சிங்கப்பூர் :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏனென்றால் அங்குப் பெரும்பாலான மக்கள் இந்தியர்களாக இருக்கின்றனர். அதிலும் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருப்பதால், இந்தியாவை போலச் சிங்கப்பூரிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூரில் “லிட்டில் இந்தியா” என்று ஒரு பகுதி உள்ளது. தீபாவளியின்போது இந்தியர்கள் அங்கு ஒன்று கூடி விளக்குகள் ஏற்றியும், இனிப்புகளைப் பகிர்ந்தும் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் பட்டாசுகள் வெடிப்பதில்லை.

 

நேபாள் :

இந்தியாவின் நட்பு நாடான நேபாளிலும், இந்தியாவைப் போலவே தீபாவளி கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. நேபாளில் தீபாவளி பண்டிகையைத் திகார் என்று அழைக்கின்றனர். கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்குத் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. தீபாவளியின்போது நேபாளில் தெய்வங்களை வழிபடுவது மட்டுமின்றி விலங்குகளையும் (நாய்) வழிபடுகின்றனர்.  

 

தீபாவளி பண்டிகையை வெளிநாடுகளுக்கு சென்று கொண்டாட விரும்பினால் நீங்கள் மேற்கண்ட நாடுகளுக்கு நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் செல்லலாம்.

 Image source: Google 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]