நவம்பர் டிசம்பர் மாதங்களில் பலரும் சுற்றுலா செல்ல பிளான் செய்வார்கள். அதற்கு முக்கிய காரணம் குளிர் காலம் துவங்கிய நிலையில் ஜில் கிளைமேட்டில் சுற்றுலா செல்ல சிறந்த காலம் இது. இன்னும் சிலர் வருடத்தின் முடிவுக்கு வருவதால் நண்பர்களுடன் ஒரு சுற்றுலா செல்ல பிளான் செய்வார்கள். இந்த குளிர்காலத்தில் சுற்றுலா செல்ல சரியான இடத்தைத் தேடுகிறீர்களா? தென்னிந்தியாவில் உள்ள இந்த கர்நாடகா மாநிலம் பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் கலாச்சார ரீதியாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான சுற்றுலா தளங்களை வழங்குகிறது. பசுமையான நிலப்பரப்புகள் முதல் வரலாற்று நினைவுச்சின்னங்கள் வரை, கர்நாடகாவில் அனைவருக்கும் ஏதாவது ஒரு பிடித்த தளம் உள்ளது. அந்த வரிசையில் குளிர்காலத்தில் நீங்கள் செல்ல வேண்டிய கர்நாடகாவின் சில சிறந்த சுற்றுலாத் தளங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கூர்க்:
"இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் இந்த கூர்க். பசுமையான காபி தோட்டங்கள், பனிமூட்டமான மலைகள் மற்றும் பிரமிக்கவைக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு புகழ்பெற்ற இந்த கூர்க், இயற்கை பிரியர்களுக்கு ஒரு சொர்க்கம் என்று தான் சொல்ல வேண்டும். குளிர்காலத்தில் கிளைமேட் இங்கு குளிர்ச்சியாக இருக்கும், இது இந்த இடத்தின் இயற்கை அழகை ரசிக்க சரியான நேரமாக அமைகிறது.
மைசூர்:
மைசூர் வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த ஒரு நகரமாகும். இது கர்நாடகாவில் கட்டாயம் பார்வையிட வேண்டிய ஒரு இடமாக அமைகிறது. மைசூர் அரண்மனை, சாமுண்டி மலை மற்றும் பிருந்தாவன் தோட்டங்கள் குளிர்காலத்தில் பார்க்க வேண்டிய சில இடங்கள். அதே போல இந்த நேரத்தில் நடைபெறும் மைசூர் தசரா திருவிழாவின் பிரமாண்டமான கொண்டாட்டங்களை பார்க்க மிஸ் பண்ணாதீங்க.
ஹம்பி:
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஹம்பி விஜயநகரப் பேரரசின் பழங்கால இடிபாடுகளின் புதையல். குளிர்காலம் ஹம்பியைப் பார்வையிட சிறந்த நேரமாகும். ஏனெனில் வானிலை இங்கு ஜில்லென்று இருக்கும் மற்றும் நிலப்பரப்பில் உள்ள ஏராளமான கோயில்கள், வரலாறு இடங்களை பார்க்க சிறந்த காலம் இது.
மேலும் படிக்க: "குகைக்குள் அற்புதம்" வள்ளிமலை முருகன் கோயிலின் வரலாறும் சிறப்புகளும்
கோகர்ணா:
கடற்கரை பிரியர்களுக்கு கோகர்னா ஒரு சிறந்த தேர்வாக அமையும். கர்நாடக கடற்கரையில் மறைக்கப்பட்ட ஒரு அழகான இடம் இந்த கோகர்ணா. அதன் பழமையான கடற்கரைகள், தெளிவான நீல நீர் மற்றும் அமைதியான சூழல் இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் ஓய்வெடுக்க கோகர்ணா சரியான இடமாகும். இங்கு நீங்கள் கடற்கரைகளில் ஒய்வு எடுக்கலாம், சர்பிங் போட்டிங் போன்ற நீர் விளையாட்டுகளை முயற்சிக்கலாம் அல்லது வெறுமனே வெயிலில் அந்த கடலில் நீந்தலாம்.
Image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation