ஆடி அமாவசை ராமேஷ்வரம் சுற்றுலா என்ற பெயரில் தமிழக சுற்றுலா துறை 3 நாள் பயணத்தை அறிவித்துள்ளது. இந்த பயணத்தில் உணவு, தங்குமிடம், போக்குவரத்திற்கு ஒரே கட்டணமாகும். தஞ்சையின் முக்கிய அம்மன் கோவில்களில் ஆடி மாத ஆன்மிக சுற்றுலாவை தொடர்ந்து ராமேஷ்வரத்தில் 3 நாள் ஆடி அமாவாசை பயணத்தை தொடங்கவுள்ளது. ஆடி அமாவாசை சுற்றுலா தொடங்கும் நாள், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை பக்த கோடிகள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மூன்று நாள் ஆன்மிக சுற்றுலாவில் பக்தர்கள் ராமர் பாதம், தனுஷ்கோடி, ராமநாதசுவாமி திருக்கோவில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலுக்கு பயணப்படுவார்கள். வரும் ஜூலை 22ஆம் தேதி ஆடி 6 செவ்வாய்க்கிழமை முதல் சேவை தொடங்குகிறது. சென்னையில் இருந்து இந்த பயணம் தொடங்கும்.
இந்த பயணத்திற்கான மொத்த கட்டணம் 6 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். சென்னையில் இருந்து ஜூலை 22ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு திருவல்லிக்கேணி சுற்றுலா மையத்தில் பயணம் ஆரம்பமாகும். அரசுப் பேருந்தில் நீங்கள் பயணப்படுவீர்கள். மறுநாள் காலை 5 மணிக்கு ராமேஷ்வரத்தை சென்றடைவீர்கள். அங்கு ஹோட்டல் தமிழ்நாட்டில் குளித்து முடித்து ஆன்மிக பயணத்திற்கு தயாராகலாம். 7.30 மணி அளவில் காலை உணவு வழங்கப்படும். அதன் பிறகு 8.30 மணி அளவில் ராமர் பாதம் அழைத்து செல்லப்படுவீர்கள். அதை தொடர்ந்து 9 மணிக்கு தனுஷ்கோடியை பார்வையிடுவீர்கள்.
12 மணி அளவில் மதிய உணவு வழங்கப்படும். சரியாக 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் அழைத்து செல்லப்படுவீர்கள். அங்குள்ள தீர்த்த குளங்களில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்வீர்கள். 2 மணி நேரத்தில் தரிசனம் நிறைவடைந்தவுடன் மீண்டும் ஹோட்டல் தமிழ்நாட்டிற்கு பேருந்து செல்லும். அங்கு இரவு சாப்பிட்டு நீங்கள் தூங்கலாம்.
மேலும் படிங்க ஆடி மாத ஆன்மிக சுற்றுலா : தஞ்சையின் முக்கிய கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கலாம்
திருப்புல்லாணியில் தனியாக பித்ரு பூஜை செய்ய வேண்டுமானால் குறைந்தது 5 ஆயிரம் ரூபாய் செலவாகும். இந்த ஆடி அமாவாசை பயணத்தில் ஒட்டுமொத்த கட்டணமும் 6 ஆயிரத்து 500 ரூபாய்க்குள் அடங்கிவிடும். பிரம்ம மூகூர்த்தத்திற்கு முன்பாக 3 மணி அளவில் ஒவ்வொரு நபராக பித்ரு பூஜை தொடங்குவீர்கள். அதை தொடர்ந்து 8 மணிக்கு காலை உணவு சாப்பிட்டவுடன் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் தரிசனத்திற்கு செல்வீர்கள். 12 மணிக்கு பெருமாள் கோவில் மற்றும் 3 மணி அளவில் தேவிபட்டினம் நவகிரக தளத்தில் தரிசனம் செய்வீர்கள். நேரம் இருந்தால் உத்திரகோசமங்கை, பிள்ளையார்பட்டி, திருமயம் அழைத்து செல்லப்படுவீர்கள். அன்றிரவு புறப்பட்டு மறுநாள் 6 மணிக்கு சென்னையை வந்தடைவீர்கள்.
பயணத்தில் அரசின் சுற்றுலா வழிகாட்டி இருப்பதால் எல்லா இடங்களிலும் சிறப்பு தரிசனம் செய்வீர்கள். இந்த வாய்ப்பை பக்தர்கள் தவறவிட வேண்டாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]