herzindagi
b

பட்டையை கிளப்பும் பேடாஸ் லியோதாஸ் பாடல் ரிலீஸ்

ரசிகர்கள் கொண்டாடும்  பேடாஸ் பாடல் லியோவில் அனிருத் இசையுடன்  ஹிட்ரிலீஸ் ஆகியுள்ளது
Editorial
Updated:- 2023-09-29, 22:00 IST

லியோ படத்தின் பேடாஸ் சிங்கிள் வெளியானதை அடுத்து அனிருத் ரவிச்சந்திரன் பாடிய பேடாஸ் பாடல் வரிகள் வெளியாகிப் பட்டி தொட்டி எல்லாம் பரவிக் கொண்டிருக்கின்றது. தன்னம்பிக்கையுடன் தாறுமாறு அனிருத் வாய்ஸ் பேடாஸ் பாடல் பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றது. அனிருத் இசை அமைத்த இந்தப் பாடலுக்கு விஷ்ணு எடவன் பாட்டு எழுதியுள்ளார் லியோ படத்தில் 'நான் ரெடி' பாடலையும் இவர்தான் எழுதியிருந்தார்.

 

பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே லியோ ஏற்படுத்தியுள்ளது. தற்போது லியோவின் பேடாஸ் பாடல் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு மேல் வெளியாகியிருக்கின்றது. இந்தப் பாடல் கேட்கும்பொழுது லியோதாஸ் கதாபாத்திரம் தன்னம்பிக்கையின் உச்சத்தை தொட வைக்கின்றது. லியோ என்பவர் யார் என்பதை விளக்குகின்றது.

 மேலும் படிக்க: :பட்டையை கிளப்பும் விஜயின் லியோ பட பேடாஸ் ப்ரோமா இசை வெளியீடு

 

 லியோ என்பவன் எரிமலை போன்றவன் என்பதை இந்தப் பாடல் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது. இப்பாடலின் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அத்துடன் அனிருத்தின் வாய்ஸ் ஜெயிலர் படத்திற்கு கொடுத்த அதே வலிமையான குரலை இங்கும் பதிவு செய்துள்ளார். லியோ படத்திற்கான ஆடியோ ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், அப்படத்தின் இரண்டாம் பாடல் பட்டி தொட்டி எல்லாம் மாஸ் கிளப்பி வருகின்றது. 

 

மேலும் படிக்க:  ‘லியோ’படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியீடு! ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..

 

bada  im

 

 எங்கும் பேடாஸ் எதிலும் பேடாஸ் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். லியோதாசுக்கான கொண்டாட்டம் ரசிகர்களிடையே பெருகி வருகின்றது என்று கூறலாம். துப்பாக்கி படத்தில் “ஐ அம் வெயிட்டிங்” என்று விஜய்  கூறியிருப்பார். அதே டயலாக்குடன் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படம் ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எங்கும் லியோ பேச்சாக இருக்கின்றது. அப்படத்திலிருந்து நம்மைப் பத்தவைத்து மெய்சிலிர்க்க வைக்கும் வரிகளை இங்குக் கொடுத்துள்ளோம். படித்துப் பாருங்கள் ஒரு வித சிலிர்ப்பு நம்மை வருடிச் செல்லும். 

 

மேலும் படிக்க:  லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை திடீர் ரத்து செய்ய என்ன காரணம் தெரியுமா? 

 

சிங்கம் இறங்குன காட்டுக்கே விருந்து

இவன் வேட்டைக்கு சிதறனும் பயந்து

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி

குடல் உருவுற சம்பவம் உறுதி

இதுவரையில் நல்லவனா இருந்தான்

இந்த கதையில ராட்சசன் முகம் தான்

 

வத்திக்குச்சியில எரிமலை மவனே

நெருங்காதே நீ

குலசாமிய வேண்டிக்கோ மாமே

மொறைக்காதே நீ

உரசாம ஓடு உன் வால சுருட்டிடு

 

 Image credit: Google 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]