லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் , அர்ஜுன் , சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் லோகேஷ் கனகராஜின் ‘LCU’வில் வருமா அல்லது தனிப்பட்டகதையாக எடுக்கப்பட்டுள்ளதா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் பிறந்தநாளுக்கு கிளிம்ப்ஸ் வீடியோவை பதிவிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்தது. படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்திருக்கிறார். அதே போல ஹரோல் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார் என்பது கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் தெரியவந்தது. இருவரும் படத்தின் முக்கிய வில்லனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.விரைவில் இசை வெளியீட்டு விழா குறித்த விவரங்களை படக்குழு தெரிவிக்க உள்ளனர்.
இந்நிலையில் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டு #leoteluguposter என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி இருக்கிறார். மேலும் அடுத்த 4 நாட்களுக்கு லியோ போஸ்டர் வெளியிடப்படும் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா! ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன் போட்டோஸ்..
லியோ படத்தின் அதிக சீன்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருக்கிறது. புதிய போஸ்டரில் நடிகர் விஜய் சைலண்டாக நிற்பது போலவும் , தூரத்தில் கத்திக்கொண்டு இன்னொரு விஜய் ஓடி வருவது போலவும் போஸ்டர் இருக்கிறது .மேலும் போஸ்டரில் 'அமைதியாக இருந்து போரை தவிர்க்கவும்’ என்ற வசனங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]