
நடிகை மிர்னா மேனன் மாடல் மற்றும் நடிகையாவார். இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் மிர்னா மேனனுக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள்.
மிர்னா மேனன் இன்ஸ்டாகிராமில் விதவிதமான புடவையில் போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். லேட்டஸ்டாக அவர் பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பிங்க் கலர் புடவையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : '9 skin' என்ற புதிய பிசினஸ் தொடங்கிய நயன்தாரா!

இந்த புகைப்படத்தில் பிங்க் கலர் பூனம் புடவை கட்டியிருக்கிறார்.புடவைக்கு மேட்சாக சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்துள்ளார். அணிகலன்களை பொறுத்தவரை கற்கள் பதித்த நெக்லஸ் போட்டிருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் ஸ்டிக் போட்டு ரசிக்க வைத்திருக்கிறார். இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]