விஜயின் படமான லியோ ரிலீஸ் அக்டோபர் 19 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிடையில் ஆடியோ ரிலீஸ் நிறுத்தப்பட்டது. இது ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏன், எதற்கு, எப்படி என்று சோசியல் மீடியாக்கள் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. லியோ ஆடியோ லான்ச் ரிலீஸ் ரசிகர்கள் பாதுகாப்பு கருதியே நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. அது அப்படியல்ல அதற்குப் பின் என்ன இருக்கின்றது என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் பேசப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் சோசியல் மீடியாக்களுக்கு தீனி குறைந்துள்ளது ஆனால் லியோ ஆடியோ ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அந்தச் செய்தியை வைத்துப் பரபரப்பாக இருக்க சோசியல் மீடியாக்கள் திட்டமிட்டுள்ளன.
ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அனிருத் இசையில் பேடாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது வரவேற்பை பெற்று உள்ளது லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். ரத்னகுமார், ஜிஹெச் வைத்தி டயலாக் வசனங்கள் எழுதுகின்றனர். லியோ படத்திற்கு மனோஜ் பரமஹம்சா சினிமா ஆட்டோகிராபி செய்கிறார்.
மேலும் படிக்க: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை திடீர் ரத்து செய்ய என்ன காரணம் தெரியுமா?
பரபரப்பாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ படத்திற்கான பேடாஸ் சிங்கிள் BADASS ப்ரோமோ வீடியோ வெளியானது. விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர். ஹாலிவுட் டச்சில் அமைந்திருக்கும் லியோ படத்தின் பேடாஸ் பிரமோவானது பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
விஜய் தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். சினிமா உலகில் கல்லா கட்டும் நடிகர்களில் உச்சம் என்றால் இவரும் அந்த லிஸ்டில் அடங்குவார். இவர் நடித்த லியோ படத்தின் ஆடியோ வெளியீடு நிறுத்தப்பட்டதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ஆனால் ரசிகர்கள் பாதுகாப்பு பல்வேறு விவாதங்களை இது தடுக்கவே இந்த ஆடியோ ரிலீஸ் ஆனது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் லியோ பட ஆடியோ ரிலீஸ் ரசிகர்கள் மற்றும் சோசியல் மீடியா உலகில் பேசும் பொருளாக அவரவர்களுக்குத் தெரிந்த புரளிகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர் இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறிய விஜயின் டைட்டில் பீஸ்ட் படத்திற்கு பின்பு விஜய் கொடுக்க வேண்டிய அடுத்த படமாக லியோ அமைந்தது.
லியோ வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. லியோ படத்திற்கான தயாரிப்பினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கின்றார். லியோ படத்தில் ஹெரால்டுதாஸ் கேரக்டரில் பட்டையைக் கிளப்பும் வில்லன் லுக்கில் அர்ஜுன் நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், எவர்கிரீன் திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் இவர்களுடன் மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ மேனன், மிஸ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளங்கள் இப்படத்தில் நிறைந்து காணப்படுகின்றனர்.
லியோ ஆடியோ ரிலீஸ் நிறுத்தப்பட்டதை பல்வேறு விதமாகச் சோசியல் மீடியாக்கள் பரப்பி வருகின்றனர். இதை வைத்து இன்னொரு மார்க்கெட் நடந்து கொண்டிருக்கிறது.
விஜய் ரசிகர்கள் மத்தியில் அனைவருமே ஒருவித பரபரப்புடன் இன்று லியோ பேசுபொருளாக இருக்கின்றது. லியோ பேடாஸ் ப்ரோமோவானது ஹாலிவுட் இங்கிலீஷ் டச்சில் இருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீடு நின்று போனால் என்ன, எப்படியோ படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீசாகவுள்ளது அதனைத் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்து இருக்கின்றது. அதுவரை சோசியல் மீடியா உலகில் லியோ பேசும் பொருளாக இருக்கும். இப்போதெல்லாம் சினிமா உலகில் நடைபெறும் சிறு சிறு நடவடிக்கைகள் அனைத்தும் அனைவராலும் பேசப்படுகின்றன. பேடாஸ் சிங்கில் பிரமோ ரசிகர்கள் அனைவராலும் கமெண்ட் தெரிக்கவிடப்படுகின்றது. ரிவ்யூகள் மூலம் அள்ளித் தெளித்து வருகின்றனர். எது எப்படியோ அக்டோபர் 19 வரை லியோ வசூல் பரபரப்பு போன்ற பலவித பேச்சுகளில் அடிபட்டுக் கொண்டே இருக்கும் இது ஒரு விதமா ப்ரோமசன் ட்ரிக் என்றே சொல்லலாம் சரி அடுத்து மாஸ் அப்டேட் லியோ என்னவாகப் போகிறது என்று பார்ப்போமா
மேலும் படிக்க: ‘லியோ’படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியீடு! ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..
Image credit: Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]