’எனது வழிகாட்டியான அமிதாப்பச்சனுடன் மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி’! ரஜினிகாந்தின் நெகிழ்ச்சி பதிவு

 நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அமிதாப் பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.

 
rajinikanth with amitabh bachchan in shooting spot photo
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘தலைவர் 170’ படம் உருவாகி வருகிறது.இயக்குனர் ஞானவேல் இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கியிருந்தார்.இந்த படம் சிறந்த படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றது. இந்த படத்தில் லிஜிமோல், மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இதற்கு முன்பு தோனி, பயணம், கூட்டத்தில் ஒருத்தன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் படக்குழு விவரம் குறித்து லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. படத்தில் . துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர் என மூன்று ஹீரோயின்கள் இருக்கின்றனர். சூப்பர் கூல் திறமைக்கொண்ட நடிகர் ராணா, நடிப்பு அசுரன் என்றழைக்கப்படும் ஃபகத் பாசில் ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர். அனிருத் ரவிசந்தர் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் இருக்கிறார். ரஜினிகாந்தும் , அமிதாப் பச்சனும் இணைந்து ஹம், அந் தாகனூன், ஜிராஃப்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். கிட்டத்திட்ட 33 ஆண்டுகளுக்கு இருவரும் இணைந்து நடிக்கயிருப்பது ரசிகர்களுக்கு டுபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

amitabh latest photos

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த ரஜினிகாந்த் ட்விட்டர் தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார். ‘33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் "தலைவர் 170" படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP