War 2 movie twitter review: கூலிக்கு போட்டியாக களமிறங்கிய வார் 2 - எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் பான் இந்தியன் திரைப்படமான வார் 2 (War 2) படத்திற்கு, எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். அவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
image

கூலி திரைப்படத்திற்கு போட்டியாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் வார் 2 திரைப்படத்திற்கு, எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர். குறிப்பாக, இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெறுகிறது.

வார் 2 திரைப்படம்:

ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகி இருக்கும் வார் 2 திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருக்கிறார். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ரூ. 400 கோடி பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த பான் இந்தியன் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. மறுபுறம், ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படமும் இன்றைய தினம் வெளியாகி இருக்கிறது. இதனால், இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், வார் 2 திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

https://x.com/venkyreviews/status/1955793539394073087

அந்த வகையில் வெங்கி ரிவியூஸ் என்ற எக்ஸ் தள பக்கத்தில், "வார் 2 ஒரு சாதாரண ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம். கதையை விடவும், அதன் காட்சி அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் கதைக்களம், முந்தைய ஸ்பை யூனிவர்ஸ் திரைப்படங்களிலிருந்து ஓரளவு வேறுபட்டுள்ளது. இதில் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. கதை மாறுபட்டிருந்தாலும், திரைப்படத்தின் வேகமும், களமும் மற்ற படங்களை போலவே இருந்ததால், இது ஒரு வழக்கமான திரைப்படமாகவே தோன்றுகிறது.

மேலும் படிக்க: இந்த வாரம் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ ஓடிடியில் எதிர்பார்ப்புக்களுடன் வெளியாக இருக்கும் 3 தமிழ் படங்கள்

படத்தின் ஆரம்ப காட்சிகள் வலுவாக அமைக்கப்பட்டிருந்தன. சில நல்ல அம்சங்களான அறிமுக காட்சிகள், ஒரு பாடல், மற்றும் சில திருப்பங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. இருப்பினும், படத்தின் மையக் கதையில் இருந்த உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும், உச்சபட்ச காட்சிகளும் சரியாக கையாளப்படவில்லை.

முன்னணி நடிகர்கள் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இறுதிக் காட்சிகளில் அவர்களின் நடிப்பு தனித்துத் தெரிகிறது.

வி.எஃப்.எக்ஸ் தரம் குறைவு என கருத்து:

படத்தின் தயாரிப்பு தரம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரு சில வி.எஃப்.எக்ஸ் (VFX) காட்சிகள் தரம் குறைவாக உள்ளன. குறிப்பாக, படகில் நடைபெறும் சேஸிங் காட்சியில் இது தெளிவாகத் தெரிகிறது" என விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://x.com/rrvvchouha1640/status/1955854982097592588

சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்ததாக விமர்சனம்:

இதேபோல் ஆர்.வி.வி. சௌஹன் என்ற எக்ஸ் தள பக்கத்தில், படத்திற்கு கலவையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/Raja89101/status/1955854808646345102

இதனிடையே, ராஜா ராவத் என்ற எக்ஸ் தள பயனர், வார் 2 திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது பார்வையாளர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கலவையான விமர்சனங்களை வார் 2 திரைப்படம் பெற்று வருகிறது. ஆனால், ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகள் ஆகியவை விரும்பும் வகையில் இருந்ததாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Twitter

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP