Big boss Season 7 Tamil: கோலகலமாக 18 பிரபலங்களுடன் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 7

பிக்பாஸ் சீசன் 7  முதல் நாளே வைத்துச் செய்த  கேப்டன்சிப் டாஸ்க் 

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-10-03, 12:50 IST
inside card bb

கோலாகல கொண்டாட்டத்துடன் இரண்டு கமல்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ஐ தொடங்கி வைத்தனர். பிக்பாஸ் சீசன் 7 அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாகும். பிக் பாஸ் சீச்ன் 7, 106 நாள் பயணம் ஆகும். பிரபலங்களுக்கு இடையேயான போட்டியாகக் கருதப்படுகின்றது. இது மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் ஆறு முறை வெற்றிகரமாகப் பயணித்த பிக்பாஸ் ஏழாவது சீசனில் 18 போட்டியாளர்களுடன் அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பம்

பிக்பாஸ் சீசன் 7 கூல் சுரேஷ் முதல் போட்டியாளராகத் தொடங்கி வைத்தார். கண்ணீருடன் உணர்ச்சிவசமாக அவரின் தொடக்கம் அமைந்தது. எப்பொழுதும் போல் அவருடைய ஸ்டைலில் ஆண்டவரே என்று ஆரம்பித்தார். சிம்பு சந்தானத்திற்கு நன்றி என்று கண்ணீர் விட்டுக் தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார், அவரை வரவேற்று பிக் பாஸ் முதல் டாஸ்க் கேப்டன்சி கொடுத்தார். அதனை வாதத்துடன் மற்றவர்களுடன் வெல்வாரா, அல்லது அவர்களிடம் ஒப்படைப்பாராக என்று முதல் டாஸ்க் இருந்தது. கேப்டன்சி டாஸ்கை வேண்டாம் என்று அடுத்த வந்த நடிகை பூர்ணிமாவிடம் ஒப்படைத்து விட்டார்.

பிக்பாஸ் பிரபலங்கள் இரண்டு வீடு ஒரு கேம்

பிக்பாஸ் சீசன் 7ல் கூல்சுரேஷ், மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் மற்றும் நடிகை விசித்திரா அத்துடன் டான்சர் மணிச்சந்திரா. நடிகை ரவீனா, வனிதாவின் மகள் ஜோவிகா மற்றும் இளம் நடன மாடல், தொழில் அதிபர் அனன்யா ராவ். மேலும் கோரியோகிராபர் மற்றும் நடிகர் விஜய் வர்மா, நடிகை மாயா கிருஷ்ணன், பாண்டியன் ஸ்டோர் சரவண விக்ரம்,

n breeze an the beauty it brings

டான்சர் பிக்பாஸ் அமீரின் மாணவி ஆயிஷா. விஜய் விஷ்ணு ஆகியோருடன் பிக் பாஸ் கலகலப்பாகத் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவராகக் கேப்டன்சி பதவியில் தொடங்கி இரண்டாம் நாள் பயணம் ஆரம்பித்துவிட்டது. உலகநாயகன் தொடங்கி வைத்த இந்தப் பிக்பாஸ் வீட்டில் இந்த முறை இரண்டு வீடு ஒரு கிச்சன் என்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. கிச்சன் ஆளுமை என்பது மிகவும் கடினமானது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், இந்த முறை பிக்பாஸ் கொஞ்சம் டஃபுதான். டிஆர்பி ரேட்டில் தனக்கான இடத்தைப் பிடிக்க இரண்டு வீடு யுக்தியை பிடித்துள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் உறவினர்கள் பேட்டிகள்

பிக்பாஸ்க்கு வெளியே பிக்பாஸ் சீசன் 7யை சேர்ந்த போட்டியாளர்களின் உறவினர்கள் சோசியல் மீடியாவில் கலகல எனப் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் வனிதா தனது மகள் ஜோவிகாவிற்கு சோசியல் மீடியா ப்ரோமோஷன் கொடுத்து வருகின்றார்.

பிரபல முன்னணி பாடகராக இருந்த மலேசியா வாசுதேவன் அவர்களுடைய மகன் சிறந்த நடிகரான பாடகரான யுகேந்திரன், மனைவியும் தனது கணவருக்காகச் சோசியல் மீடியாவில் பிரபலமாகப் பேட்டி அளித்த வருகின்றார். இப்படியாகச் சோசியல் மீடியா ட்ரெண்டிங் மற்றும் ஆல் ஓவர் தமிழ்நாடு ட்ரெண்டிங்கில் முக்கிய இடமாகப் பிக் பாஸ் 7 பிடித்துள்ளது என்பது இப்போதைய ஹைலைட் ஆகும்.

இவர்களுடன் எழுத்தாளர் பாவா செல்லதுரை

பாரதி கண்ணம்மா வினுஷா தேவி, நடிகர்

பிரதீப் ஆண்டனி, நடிகை அக்ஷயா உதயகுமார்

ரேப் பாடகர் நிக்சன்

நடிகை பூர்ணிமா ரவி போன்றோர் களத்தில் இறங்கி உள்ளனர். பிக்பாஸ் சீசன் 7 களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Image source :Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP