இந்த ஆண்டிற்கான காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக காதலர்களால் கொண்டாடப்பட உள்ளது. இந்த தனித்துவமிக்க மகிழ்ச்சிகரமான நாளில் இளைஞர்கள் இளம் பெண்கள் தங்களது காதல் துணை முன்பு அழகாக தோற்றமளிக்க வேண்டும் என எண்ணுவார்கள். இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான தோல் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. திருமண நிகழ்வு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும்போது இந்த முகப்பரு அவர்களின் முக அழகில் ஒரு தடையாக உள்ளது.
மேலும் படிக்க: வேலைக்குச் செல்லும் பிசியான பெண்களே - அடர் கருப்பு கூந்தலுக்கு இந்த ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க
உடலில் ஹார்மோன் அளவுகள் பாதிக்கப்படும்போது இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது தவிர வானிலை மாற்றங்கள் ஜங்க் புட் அல்லது என்னை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் முகப்பருவை ஏற்படுத்தும். முதலில் முகப்பரு சற்று சிறியதாக தோன்றும் நாளடைவில் அது பெரிய பருவாக மாறி முகத்தின் அழகைக் கெடுத்து தழும்பாக நின்றுவிடும். காதலர் தின வாரத்திற்கு முன்பு முகப்பரு ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது காதலர் தினத்தன்று தங்கள் காதலை வெளிப்படுத்த இளைஞர்கள் இளம் பெண்கள் தயாராகி வருகின்றனர் இந்த வீட்டு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் முகப்பரு முற்றிலும் மறைந்து அதனால் ஏற்பட்ட தழும்பும் விரைவில் மறையும்.
சமையல் சோடா
இரண்டு சிட்டிகை பேக்கிங் சோடா ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். பின்னர் தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவவும். பேஸ்ட் காய்ந்த பிறகு அதை தண்ணீரில் நன்றாக கழுவும் இந்த பேஸ்ட்டை இரவில் பருக்கள் மீது தடவுவதன் மூலம் உறுத்தல் இல்லாமல் நீங்கள் நிம்மதியாக தூங்கலாம் இருப்பினும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தை நன்கு கழுவி சிறிது நேரம் கழித்து பேஸ்டை முகத்தில் போட்டுக் கொள்ளவும். இப்படி செய்யும் பட்சத்தில் உங்கள் முகப்பரு சில நாட்களில் மறைந்துவிடும்.
உடல் நலம் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு பெரிதளவில் கிராம்பு மூலிகை பயன்படுத்தப்படுகிறது. முகப்பருவை எதிர்த்துப் போராட கிராம்புகளை நன்றாக அரைத்து பொடியாக தயார் செய்யவும். பின்னர் கிராம்பு பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவவும். நீங்கள் அதை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்தால் மறுநாள் காலையில் பருக்கள் மறைந்து விடும்.
முகத்தில் உள்ள பருக்களை ஒட்டுமொத்தமாக விரட்ட ஜாதிக்காய் பெரிதும் உதவும். இது பரிவில் சேர்ந்துள்ள சீல் தண்ணீரை நீக்குகிறது முகப்பருவில் இதை பயன்படுத்த ஜாதிக்காய் பொடியை எடுத்து கற்றாழையுடன் கலந்து முகப்பருவில் தடவவும் சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் முகத்தை கழுவவும்.
பருக்கள் விரைவில் மறைந்து விடும். ஆனால், அதன் கரை முகத்தில் நீண்ட நேரம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் கரையை எதிர்த்து போராட அலோ வேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். இது சருமத்திற்கு மிகவும் நல்லது. தோல் தொடர்பான பல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.
மேலும் படிக்க: 10 நிமிடம் போதும் உங்கள் முகம் ஜொலிக்க, அலோவேரா - நீம் பேஸ் பேக் எப்படி செய்வது?
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]