தற்போதைய நவீன காலத்து பெண்கள் தங்களின் முகத்தை அழகுப்படுத்த விலை உயர்ந்த பியூட்டி பார்லர் சலூன் களுக்குச் சென்று பல்வேறு பேஸ் பேக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை மாத கணக்கில் பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தாலும் பெண்கள் எதிர்பார்த்த அழகு முன்னேற்ற முடிவுகள் கிடைப்பதில்லை என்பது உண்மை.
மேலும் படிக்க:முகச்சுருக்கங்களைப் போக்கி, 40 வயதில் 20 போல் இருக்க மஞ்சள் பேஸ் பேக்- இப்படி மட்டும் யூஸ் பண்ணுங்க
பெரும்பாலான பெண்கள் தங்களின் முகத்தை எப்படியாவது அழகு படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் பல முயற்சிகளை செய்தாலும் இது தோல்வியில் தான் வந்து முடிகிறது. அப்படியே சில நல்ல முடிவுகள் கிடைத்தாலும் அது வெகு நாட்களுக்கு நீடிப்பதில்லை. இது போன்ற நேரங்களில் சில இயற்கையான வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். குறிப்பாக இயற்கையின் வரப்பிரசாதமாக இருக்கும் பொருட்களை உங்கள் முகத்தை அழகுப்படுத்த நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் சில நாட்களிலேயே கிடைக்கும் அதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.
பெண்களின் கருப்படைந்த முகத்திற்கு செம்பருத்திப் பூ ஜெல்
-1740765251865.jpg)
உங்கள் முகத்தில் எண்ணெய் பசை நாளுக்கு நாள் அதிகரித்து முகம் கருப்படைந்து மந்தமாக தோற்றமளிக்கிறதா? வெளியில் அதிகம் சுற்றி முகத்தில் அழுக்கு படிந்து எண்ணெய் பசை சருமத்தால் முகம் முழுவதும் அடுத்தடுத்து முகப்பருக்கள் வந்து முகம் பொலிவு இழந்து கருப்பாக உள்ளதா கவலை வேண்டாம் இந்த பதிவில் உள்ளது போல செம்பருத்திப் பூக்களை லாபகரமாக பயன்படுத்துங்கள். 7 நாட்களில் உங்கள் முகம் எந்தவித அழுக்குகள் முகப்பருக்கள் இல்லாமல் பளபளப்பாக ஜொலிக்கும்.
செம்பருத்தி பூக்கள் பெண்களின் முக அழகிற்கு, ஒட்டுமொத்த சருமத்திற்கு, கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறது. ஆயுர்வேதத்தில் செம்பருத்தி பூக்களை பல மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். செம்பருத்திப் பூக்களை உங்கள் முகத்திற்கு இந்த வழிகளில் பயன்படுத்துங்கள் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் சில நாட்களிலேயே கிடைக்கும்.
செம்பருத்திப்பூ கலவை ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூக்கள் 10
- தண்ணீர் அரை லிட்டர்
செய்முறை
- புதிதாக பறித்த பத்து செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளவும்.
- அரை லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் மிதமான அளவு சூடாகிய பின்பு செம்பருத்தி பூக்களை தண்ணீரில் போடவும்.
- அடுப்பை குறைவாக வைத்து 15 நிமிடம் செம்பருத்தி பூக்களை வேக வைக்கவும்.
- தற்போது பசை போன்ற வடிவத்தில் செம்பருத்திப்பூ சாம்பல் கலரில் மாறி ஒரு கலவை கிடைக்கும்.
- அதை அப்படியே பிரித்து எடுத்து ஒரு தனி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
- செம்பருத்தி பூ கலவை பேஸ் பேக் தயார்.
பயன்படுத்தும் முறை
- செம்பருத்திப்பூ கலவை ஒரு ஜெல் வடிவத்தில் இருக்கும்.
- அதை எடுத்து அப்படியே உங்கள் முகம் முழுவதும் மெதுவாக தேய்த்து மசாஜ் பண்ணவும்.
- முகத்தில் மட்டுமல்லாது கை, கால்கள் என கருப்படைந்த பகுதிகளில் இந்த செம்பருத்தி பூ வேக வைத்த கலவை ஜெல்லை தடவவும்.
- ஒரு 20 நிமிடம் உலர வைக்கவும். பின்னர் அது பேஸ்ட் போல முகத்தில் ஒட்டிக் கொள்ளும்.
- அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
- முகத்தில் இருந்த என்னைப் பசை அழுக்கு, சரியாகி முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
- இந்த செய்முறையை தொடர்ந்து ஏழு நாட்கள் குளிப்பதற்கு முன் செய்து வந்தால் 7 நாட்களில் உங்கள் முகம் ஹீரோயின் போல பளபளப்பாக ஜொலிக்கும்.
செம்பருத்திப் பூ அரைத்த பேஸ்ட் பேக்
இயற்கையான போடாக்ஸ் பண்புகளைக் கொண்ட ஒரே மலர் செம்பருத்தி மட்டுமே. வைட்டமின் சி சத்து கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி முகத்தை இறுக்கமாக்க உதவுகிறது. செம்பருத்தி பூக்களை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் நன்கு கழுவவும்.
செம்பருத்தி மற்றும் முல்தானி மிட்டி
- ஒவ்வொரு வகையான ஃபேஸ் பேக்கும் குறிப்பிட்ட தோல் வகைகளுக்காக தயாரிக்கப்படுகிறது. இந்த செம்பருத்தி மற்றும் முல்தானி மிட்டி பேக் அனைத்து சரும வகைகளுக்கும், குறிப்பாக எண்ணெய் பசை சருமத்திற்கும் சிறந்தது.
- செம்பருத்தி மற்றும் ரோஜா இதழ்களின் கலவையானது உங்கள் சருமத்தை சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சரும சேதத்தை மாற்றியமைக்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தினால், உங்கள் சருமம் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
செம்பருத்தி மற்றும் தயிர்
செம்பருத்தி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது முகப்பருவை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை நீக்குகிறது. இதில் புரோபயாடிக்குகளும் உள்ளன, இது ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தை மீண்டும் பெற உதவுகிறது. தயிரில் துத்தநாகமும் உள்ளது, இது அடைபட்ட துளைகளை சுருக்கி மூடுவதன் மூலம் முகப்பருவைத் தடுக்க உதவுகிறது.
முகத்திற்கு செம்பருத்திப் பூக்களின் நன்மைகள்
- எந்த வகையான சருமத்திற்கும் முகமூடி அவசியம். ஒரு முகமூடி சருமத்தின் துளைகளை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்கிறது. செம்பருத்தி அத்தகைய ஒரு ஃபேஸ் பேக் ஆகும். செம்பருத்தி பூக்களில் உள்ள வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
- சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, செம்பருத்தியில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. தோல் காயங்களை விரைவாக குணப்படுத்த செம்பருத்தி உதவுகிறது.
தோல் துளைகளை சுத்தம் செய்கிறது
செம்பருத்தியின் இயற்கையான சர்பாக்டான்ட் பண்புகள், சருமத்தின் இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் ஆழமாக சுத்தப்படுத்த உதவுகின்றன. செம்பருத்தியில் உள்ள AHAக்கள் இறந்த செல்களை நீக்குகின்றன. சருமத்துளைகளை சுத்தம் செய்து, சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் காட்டும்.
செம்பருத்தி பூ ஈரப்பதமூட்டியாக செயல்படும்
செம்பருத்தி இதழ்களில் அதிக சளிச்சவ்வு உள்ளது, மேலும் இந்தப் பண்பு செம்பருத்தியை சருமத்திற்கு ஈரப்பதமாக்குகிறது. செம்பருத்தி பூ பேஸ்ட்டைப் பயன்படுத்துவது வறண்ட சருமத்தை இயற்கையாகவே ஈரப்பதமாக்கி, பளபளப்பாகக் காட்டும்.
சரும நிறத்தை மேம்படுத்துகிறது
எந்தவொரு சரும நிறத்திற்கும், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் கரும்புள்ளிகளுக்கும் செம்பருத்தி உடனடி நிவாரணம் அளிக்கிறது. சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்களைக் கொண்டுள்ளது. இது செல்களை ஊட்டமளிக்கும், சரும நிறத்தைப் புதுப்பிக்கும் வலுவான எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளைக் கொண்டுள்ளது.
ஒளிரும் தோல்
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த செம்பருத்தியில் உள்ள அந்தோசயனோசைடுகள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சருமத்தின் முன்கூட்டிய வயதானதை தாமதப்படுத்துகிறது.
செம்பருத்தியின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள், சருமத்துளைகளை இறுக்குவதன் மூலம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகின்றன. செம்பருத்தியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைத்து, சரும சிவப்பைக் குணப்படுத்துகின்றன.
மேலும் படிக்க:அடுத்தடுத்து வந்த முகப்பருவால் முகம் கருபடைந்து உள்ளதா? ஜாதிக்காய் பேஷ் பேக்கை இப்படி யூஸ் பண்ணுங்க
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation