herzindagi
kajal for women

Homemade eyeliner: பெண்களின் கண்களை அழகாக்கும் கண் இமை.. வீட்டிலேயே தயார் செய்யலாம்!

 கண்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் குளிர்ச்சியை மட்டும் தரக்கூடிய கண் மையை வீட்டிலேயே தயார் செய்யும் முறை.
Editorial
Updated:- 2024-02-01, 12:23 IST

“கண்ணுக்கு மை அழகு” என்ற கூற்றை யாராலும் மறுக்க முடியாது. வசீரக்கும் கண்களோடு வலம் வரும் பெண்களை மிகவும் அழகாக காட்டுவதில் கண் மைகளுக்கு ஈடாக எதுவும் இருக்காது. தொன்று தொட்டு நம்முடைய பெண்களிடம் கண் மைகள் போடும் பழக்கம் உள்ளது. இன்றைக்கு சந்தைகளில் காஜல், மஸ்காரா, ஐ லைனர் என விதவிதமான கண் மைகள் விற்பனையாகிறது. இதில் ராசாயன பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் உபயோகப்படுத்துவதில்லை. இதில் நீங்களும் ஒருவராக கவலை வேண்டாம். வீட்டிலேயே இயற்கையான முறையில் கண் மைகளை எப்படி தயாரிக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..

வீட்டிலேயே கண் மை தயாரிக்கும் முறை:

 

eyeliner

மேலும் படிங்க: குளிர்காலத்திலும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பா? இந்த பேஸ் பேக் யூஸ் பண்ணிப்பாருங்க!

தேவையான பொருட்கள்

  • விளக்குகள் - 2
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு
  • தடினமான திரி - 2
  • எவர்சில்வர் தட்டு - 1
  • சில்வர் டம்ளர் - 1

செய்முறை:

  • முதலில் 2  விளக்குகளை ஏற்றி நடுவில் சில்வர் டம்ளரை வைக்கவும். பின்னர் டம்ளரை தட்டினால் மூடி வைக்கவும்.
  • சுமார் 1 மணி நேரத்திற்காவது விளக்குகளை எரிய விட வேண்டும். ஓரளவிற்கு மூடியில் கரி படிந்துவிட்டால் விளக்குகளை அணைத்துவிடவும்..
  • பின்னர் தட்டின் சூடு ஆறிய பின்னதாக படிந்துள்ள கரியை தனியாக பிரித்தெடுத்து வைக்கவும்.  இதையடுத்து புகைக்கரியில் விளக்கெண்ணெய் விட்டு பசை போன்று கரைத்தால் போதும் இயற்கையான கண் மை ரெடி. 
  • விளக்கெண்ணெய் வைத்து தயார் செய்யும் இந்த கண் மை கண்களுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடும். முன்பெல்லாம் குழந்தைகளுக்குக் கூட வீட்டில் தயார் செய்யும் கண் மைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். டம்ளருக்குப் பதிலாக தேங்காய் சிரட்டைகளை வைத்து மேற்கூறியுள்ள முறைகளில் இயற்கையான முறையில் கண் மைகளைத் தயார் செய்துள்ளனர்.

kajal homemade

 

இதோ மற்றொரு முறையிலும் கண்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் குளிர்ச்சியை மட்டும் தரக்கூடிய கண் மை எப்படி தயார் செய்யலாம்? என்பது குறித்த விபரங்கள் இங்கே..

தேவையான பொருட்கள்

  • கரிசலாங்கண்ணி பொடி - 1 பாக்கெட்
  • அகல் விளக்குகள் - 2
  • பஞ்சு திரி - 4
  • விளக்கெண்ணெய்  - தேவையான அளவு

செய்முறை: 

  • ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி பொடியை தண்ணீரில் கலக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுள் பஞ்சு திரியை போட்டு விளக்குகள் போடும் அளவிற்கு திரித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் 2 அகல் விளக்குகளை நேர் எதிராக வைத்துக் கொண்டு விளக்கெண்டு ஊற்றி விளக்கு ஏற்றவும். அதில் டம்ளர் அல்லது சிரட்டையை கவிழ்த்தி வைக்கவும். ஒரளவிற்கு கரி படிந்திருந்தால் விளக்கை அணைத்து, சூடு ஆறியதும் புகைக்கரியை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இதையடுத்து சிறிய பாத்திரத்தில் மாற்றி விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து வைத்தால் போதும், கண்களைப் பாதுகாக்கும் கண் மை ரெடி.

 மேலும் படிங்க: பெண்களின் முகத்தைப் பொலிவாக்க உதவும் கிவி பழம்..!

homemade kajal tips


இது போன்ற முறைகளில் நீங்களும் உங்களது வீடுகளில் இயற்கையான முறையில் கண்களுக்கு மை தாயரித்துக் கொள்வதற்கு கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். 

 Image Credit: Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]