herzindagi
pimple pores

Facial Pores Remedy: முகத்தில் ஏற்படும் துளைகளை விரைவாக போக்க ஃபேஸ் பேக்

முகத்தில் திறந்த துளைகள் பிரச்சனை பெரும் சிரமம், அதற்காக அற்புதமான ஹோம் பேக்கைப் பயன்படுத்தலாம். 
Editorial
Updated:- 2023-07-31, 10:52 IST

முகத்தில் ஏற்படும் திறந்த துளைகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் உங்களுக்காக ஒரு சிறந்த ஃபேஸ் பேக் இருக்கிறது. இது திறந்த துளைகளை அகற்ற உதவும். இந்த ஃபேஸ் பேக்கின் சிறந்த விஷயம் என்னவென்றால் சருமத்துளைகளை மூடுவதுடன், முகத்தை பொலிவாக்குகிறது மற்றும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

சில சமயங்களில் சரியாக சுத்தம் செய்யாததால், முகத்தின் சருமத்தில் துளைகள் திறக்கும் பிரச்சனை ஏற்படும். இந்த துளைகளை மறைக்க பெண்கள் கன்சீலர் மற்றும் ஃபவுண்டேஷன் பயன்படுத்தினாலும் மேக்கப்பை அகற்றிய பிறகு திறந்த துளைகள் மீண்டும் தெரியும். இந்த வீட்டு வைத்தியம் மூலம் துளைகளை சுருக்கி அவற்றை மறையச் செய்யலாம். இதை வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் 3 பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம் மற்றும் அற்புதமான பலன்களைத் தருகிறது. 

தேவையான பொருள்கள்

lemon facial pores

  • எலுமிச்சை - ½ தேக்கரண்டி
  • சர்க்கரை - ½ தேக்கரண்டி
  • ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி

ஃபேஸ் பேக் செய்முறை

  • எலுமிச்சையை எடுத்து அதன் சாற்றை ஒரு வெற்று பாத்திரத்தில் பிழியவும்.
  • பிறகு எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து நன்றாக கலக்கவும்.
  • ரோஸ் வாட்டர் சேர்த்து, சர்க்கரை துகள்கள் நன்கு கரையும் வரை அனைத்தையும் நன்கு கலக்கவும்.

ஃபேஸ் பேக் தயார்.

  • ஃபேஸ் பேக் பயன்படுத்தும் முறை 
  • சருமத்தை சுத்தம் செய்ய பருத்தி பஞ்சு உதவியுடன் மூக்கு, நெற்றி, கன்னம் போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த பேக்கைப் பயன்படுத்துங்கள்.
  • பின்னர் சுமார் 15-20 நிமிடங்கள் அல்லது பேக் முழுவதுமாக காய்ந்து போகும் வரை அப்படியே விடவும்.
  • சருமம் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 
  • அதன் பிறகு சருமத்தை நன்றாக துடைக்கவும்.
  • இந்த பேக்கின் முதல் பயன்பாட்டிலிருந்தே நல்ல முடிவுகள் காட்டத் தொடங்கும்.
  • அதைனை தினமும் பயன்படுத்தலாம். 

நன்மைகள் 

  • முகப்பரு வயது புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறது.
  • எலுமிச்சையில் உள்ள அமில பண்புகள் துளைகளை ஆழமாக சுத்தம் செய்கிறது.
  • வைட்டமின் சி நிறைந்திருப்பதால், சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

சர்க்கரை

sugar facial pores

  • சருமத்திற்கு சிறந்த மூலப்பொருள்.
  • சருமத்தை பளபளப்பாக்குகிறது.
  • இறந்த சரும செல்கள் மற்றும் அடுக்குகளை நீக்குகிறது.
  • இளமையான சருமத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
  • துளைகள் சிறியதாக இருக்க உதவுகிறது.

பன்னீர்

rose water facial pores

  • துளைகளை சுத்தமாக வைத்திருக்கும்.
  • துளைகளை குறைக்க உதவுகிறது.
  • சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
  • சருமத்தை மென்மையாக்குகிறது.
  • சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
  • சருமத்தை மிருதுவாக்கும்.
  • தழும்புகளை ஆற்றும்.

வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்களும் துளைகள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஒவ்வொரு முறையும் போலவே, இன்றும் நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புவது, இந்த பேக் முற்றிலும் இயற்கையான பொருட்களால் ஆனது, இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன் ஒருமுறை கூட பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமாக இருக்கும். 

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]