பெண்கள் தங்களது அழகைப் பராமரித்துக் கொள்வதற்கு பெரும் மெனக்கெடுவார்கள். ஆனாலும் பல நேரங்களில் என்ன செய்தாலும் முகம் பளபளப்பாகவும், வெள்ளையாகவும் வரவில்லையே? என்ற கவலைகள் அதிகளவில் ஏற்படும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு உருளைக்கிழங்கு மட்டும் இருந்தா போதும். கண்டிப்பாக உங்களது முகத்தை எப்போதும் பளபளப்புடனும், கருமையான புள்ளிகள் வராமல் பாதுகாக்க முடியும. இதோ எப்படி? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.
மேலும் படிக்க: பளபளப்பான சருமத்திற்கான எளிய அழகு குறிப்புகள்
![homemade facial]()
சரும பொலிவிற்கு உதவும் உருளைக்கிழங்கு:
- உருளைக்கிழங்கு என்றாலே பொரியல், சிப்ஸ் என இதுவரை சமைப்பதற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் பேருதவியாக உள்ளது. அப்புறம் என்ன? இனி உருளைக்கிழங்கை இதுபோன்ற முறைகளில் பயன்படுத்தத் தொடங்குங்கள். உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி செய்யக்கூடிய அழகுக்குறிப்பு டிப்ஸ்கள் இது தான்.
மேலும் படிக்க: முகப்பரு வராமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
- முதலில் உருளைக்கிழங்கை தேங்காய் துருவல் போன்று துருவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வடிகட்டியில் போட்டு உருளைக்கிழங்கு சாறு மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் காட்டன் துணி அல்லது பஞ்சைக் கொண்டு முகத்தில் கலவை நன்கு பூசிக் கொள்ளவும். 5-10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும் சருமம் பொலிவுடன் காணப்படும்.
- இதே போன்று உருளைக்கிழங்கு ஜூசுடன், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பின்னர் 5 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, பி போன்ற சத்துக்கள் இறந்த செல்களுக்கு அழிப்பதோடு, புதிய செல்கள் வளர்ச்சியடைவும், சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருப்பதற்கு உதவியாக உள்ளது.
- உருளைக்கிழங்கு சாறுடன் நீங்கள் கற்றாழை சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யும் போது முகம் மிகுந்த பளபளப்புடன் காணப்படும்.