herzindagi
foods that can cause pimples

Prevent Pimples : முகப்பரு வராமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

முகப்பரு கொடிய நோய் கிடையாது. இதை சரி செய்வதற்கு ஆரோக்கியமான உணவு பழக்கம் போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Editorial
Updated:- 2024-02-25, 13:01 IST

இளம் வயது பெண்கள் பலரும் பயப்படும் பெரும் நோயாகவும், உளவியல் ரீதியாக சிக்கல் ஏற்படுத்தும் விஷயம் என்றால் அது முகப்பரு தான். 15 வயது முதல் 30 வயது வரை உள்ள பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் வரும் பருவை பார்த்து அதை ஏதோ மிகப்பெரிய வியாதி போல பயந்து உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என எண்ணி கடைகளிக் கிடைக்கும் பல்வேறு ரசாயனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

அதன் பிறகு தினமும் காலை எழுந்தவுடன் கண்ணாடி முன் நின்று கொண்டு எப்படியாவது முகப்பருவை குறைக்க வேண்டும் என யோசிக்கின்றனர். இதற்கான அடிப்படை காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உணவு பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் ஏற்படும் போது தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

முகத்தில் கிரீம் பயன்படுத்தி முகப்பருவை போக்கிடலாம் என நினைப்பது தற்காலிகமான தீர்வாக இருக்க கூடுமே தவிர மீண்டும் முகப்பரு வராமல் இருக்க வேண்டும் என்றால் உணவில் அக்கறை கொள்ள வேண்டும்.

foods that cause pimples

சிலருக்கு திடீரென்று அம்மை போட்டது போல முகம் முழுவதும் முகம் முழுக்க பரு வந்துவிடும். இதற்கு நமது பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக மாற்ற வேண்டும். ஹார்மோன் சமநிலையின்மை இருந்தால் நாம் சிகிச்சை எடுக்க வேண்டும். மாதவிடாய் வரும் அறிகுறியாகவும் பெண்களுக்கு முகப்பரு வரலாம். இது இயல்பான ஒன்று தான். ஆனால் பரு எப்போதுமே உங்கள் முகத்தில் இருக்கிறது என்றால் அதற்கு நடவடிக்கை தேவை.

மேலும் படிங்க பளபளப்பான சருமத்திற்கான எளிய அழகு குறிப்புகள்

முகத்தில் சோப்பு போடும் போது பருவை அழுத்தி அதிக வலி வருவதற்கான காரணம்  நீங்கள் இதுவரை பின்பற்றி வந்த உணவுமுறையே. நமது உடல் உஷ்ணமாக இருந்தால் பருக்களை உண்டாக்குகிறது, ஏனெனில் நமது உணவுப் பழக்கம் சரியாக இல்லை. ஹார்மோன்கள் சீர்படுவதற்கான உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்.

முகப்பரு பிரச்சினைக்கு சாப்பிட வேண்டியவை & சாப்பிடக் கூடாதவை

  • சிப்ஸ், சமோசா போன்ற எண்ணெய்யில் வறுத்த பொருட்களைச் சாப்பிடக் கூடாது. கொள்ளக்கூடாது. இவை பருக்களை உண்டாக்கும்.
  • ஹார்மோன் சமநிலைக்கு தேவையான உளுந்து சாப்பிடுங்கள்.
  • உடல் சூட்டைத் தவிர்க்க தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர்  தண்ணீர் குடிக்கவும்.
  • கண்டிப்பாக எண்ணெய் பொருட்களைத் தவிர்க்கவும். உணவுப் பழக்கத்தில் அதிக பழங்களைச் சேர்க்கவும்.
  • இட்லி, புட்டு போன்ற வேக வைத்த உணவுகளைத் தினமும் சாப்பிடுங்கள். மோர், தேங்காய் தண்ணீர் குடிக்கவும்.
  • இவை அனைத்தையும் விட முகத்தில் தேவையற்ற கிரீம்களை பயன்படுத்த வேண்டாம்.

மேலும் படிங்க சருமப் பிரச்சினைக்கு முல்தானி மெட்டியை பயன்படுத்தும் வழிகள் 

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]