herzindagi
image

முக பளபளப்பிற்கு அழகு நிலையங்கள் வேண்டாம்; ஆளி விதைகள் மற்றும் அரிசி மாவு போதும்!

ஆளி விதைகள் மற்றும் அரிசியில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
Editorial
Updated:- 2025-09-03, 15:53 IST

இன்றைக்கு அதிகளவில் பெண்கள் தங்களது சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அழகு நிலையங்களுக்குச் செல்கின்றனர். இது தவறில்லை. பல நேரங்களில் தங்களை அழகாக்கிக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் சில முகத்தில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால், வீட்டிலேயே நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து பேஸ் பேக் செய்து உபயோகிக்கலாம். இன்றைக்கு அவற்றில் ஒன்றான ஆளி விதைகள் மற்றும் அரிசி மாவைப் பயன்படுத்தி எப்படி முகத்தைத் தங்கம் போன்று ஜொலிக்க வைக்கமுடியும் என்பது குறித்து இந்த கட்டுரையின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

 

ஆளி விதைகள் மற்றும் அரிசி மாவு பயன்படுத்தும் முறை

  • முகத்தைப் பொலிவாக்க அரிசி மற்றும் ஆளி விதைகளைப் பயன்படுத்திப் பொலிவாக்க முடியும். இதற்கு முதலில் ஆளி விதைகள், அரிசி மாவு, தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • 1 தேக்கரண்டி ஆளி விதைகளை மிக்ஸியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் அரைத்து வைத்துள்ள ஆளி விதைகளை தண்ணீர் விட்டு காய்ச்சிக் கொள்ளவும்.

 மேலும் படிக்க: தொல்லை தரும் முகப்பருக்களை ஈசியாக போக்கலாம்; இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றவும்

  • ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றினால் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் வற்றும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.
  • சூடு ஆறியவுடன் ஆளி மற்றும் அரிசி மாவு கலவையை முகத்தில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  • பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். தொடர்ச்சியாக வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த பேசியலைப் பயன்படுத்தும் போது சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்க உதவியாக இருக்கும்.

rice flour

பயன்கள்:

மேற்கூறிய முறைகளைப் பயன்படுத்தி முகத்திற்கு பேசியல் செய்யும் போது, அதிகப்படியான எண்ணெய் மற்றும் அசுத்தங்களை நீக்கவும், மங்கலான சருமத்தைப் பிரகாசமாக்கவும், முகத்தை மென்மையாக்கவும் பயன்படுகிறது. கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் இருக்கும் பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த பேசியலைப் பயன்படுத்த வேண்டும். நிச்சயம் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: கழுத்து கருப்பாகி உங்களது அழகைக் கெடுக்கிறதா? சட்டென்று மறைய இதைப் பின்பற்றுங்கள்

எப்படி முகத்தைப் பொலிவாக்கும்?

 ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை சருமத்தை ஈரப்பதமாக்கவும், முக சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. அதே போன்று அரிசி மாவில் உள்ள பெருலிக் அமிலம் மற்றும்  அலன்டோயின் பண்புகள் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும், கரும்புள்ளிகளை நீக்கவும் உதவுகிறது. 

Image credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]