herzindagi
image

40 வயதிலும் 20 வயது போல் இருக்க ரோஜா இதழ், பீட்ரூட், கேரட் பியூட்டி ஆயிலை வீட்டில் செய்து தடவுங்கள்

25, 30 வயதிலேயே உங்கள் முகம் வயதான தோற்றத்தை எட்டியுள்ளதா? முகச்சுருக்கம் பார்த்தாலே தெரியும் அளவிற்கு பரவி உள்ளதா? அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல், வீட்டிலேயே இந்த பியூட்டி ஆயிலை தயாரித்து தூங்க செல்வதற்கு முன் முகத்தில் தடவுங்கள். 30 நாளில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
Editorial
Updated:- 2025-03-09, 12:01 IST

உங்கள் முகத்தை அழகுபடுத்த எப்போதுமே அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்க வேண்டாம். அதிலும் சிலர் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விலை உயர்ந்த சலூன்கள் பார்லருக்கு சென்று முகத்தை அழகுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். என்னதான் செலவு செய்து இந்த முயற்சிகளை எடுத்தாலும், பெண்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு ஒரே தீர்வு இயற்கை வழிகளை நாம் கையாள வேண்டும் என்பதுதான்.

 

மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து நிறுத்த, தேங்காய் எண்ணெயை சூடாக்கி இந்தப் பொருட்களை கலந்து தடவுங்கள்

 

வயது ஆக ஆக முகத்தில் தோல்கள் முதுமையான தோற்றத்தை வெளிக்காட்ட தொடங்கும். இந்த நேரங்களில் நீங்கள் சில இயற்கையான வழிமுறைகளை கையாள வேண்டும். இந்த பதிவில் உள்ள பியூட்டி ஆயிலை வீட்டிலேயே தயார் செய்து ஒரு 30 நாளுக்கு முகத்தில் தடவி பாருங்கள் 40 வயதிலும் 20 வயது போல் தோற்றமளிப்பீர்கள். முகத்தில் உள்ள சுருக்கங்கள் நாளடைவில் மறைந்து முகம் பளபளப்பாக ஜொலிப்பாக இருக்கும். இதன் செய்முறையும் மிகவும் எளியது.

40 வயதிலும் 20 வயது போல் தோற்றமளிக்க வீட்டில் இந்த எண்ணெய்யை தயாரித்து கொள்ளுங்கள்

 

rose petal beetroot carrot homemade beauty oil to look like 20 even at 40-9

 

தேவையான பொருட்கள்

 

  • மீடியம் சைஸ் பீட்ரூட் 1 துருவியது
  • சிறிய அளவிலான கேரட் 2 துருவியது
  • பன்னீர் பட்டர் ரோஸ் இதழ்கள் சிறிதளவு
  • தேங்காய் எண்ணெய் 150 மில்லி
  • ஆலிவ் எண்ணெய் 50 அல்லது 75 மில்லி
  • பாதாம் ஆயில் 50 அல்லது 75 மில்லி
  • பாதாம் பருப்பு 7 பீஸ் (தூளாக அரைத்தது)

 

செய்முறை

More For You

     

    Untitled design - 2025-03-09T113715.281

     

    1. அடுப்பில் கடாயை வைத்து சூடாக்கி, 150 எம்எல் தேங்காய எண்ணெயை கொதிக்க வைக்கவும்.
    2. 75 ml பாதாம் ஆயில், 75 ml ஆலிவ் ஆயில் ஆகியவற்றை தேங்காய் எண்ணையோடு கலக்கவும்.
    3. பின்னர் அதில் எடுத்து வைத்த பன்னீர் பட்டர் ரோஸ் இதழ்களை கலக்கவும்.
    4. 5 நிமிடம் கழித்து துருவி வைத்த கேரட் மற்றும் பீட்ரூட் சேர்க்கவும்.
    5. 40 நிமிடம் மீடியம் ஃபிளேமில் கொதிக்க வைக்கவும்.
    6. நன்றாக 40 நிமிடம் கொதித்த பின்பு இறுதியாக 7 பாதாம் பருப்பை தூளாக அரைத்து அந்த எண்ணெயில் சேர்க்கவும்.
    7. அப்படியே அதை சல்லடையில் போட்டு வடிகட்டி எண்ணெயை மட்டும் பிரித்து எடுக்கவும்.
    8. அதை லேசான சூட்டில் கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
    9. உங்களுக்கான சொந்த பியூட்டி ஆயில் தயார்.

    பயன்படுத்தும் முறை

     

    rose petal beetroot carrot homemade beauty oil to look like 20 even at 40-9

     

    1. தயார் செய்த பியூட்டி ஆயிலை இரவு தூங்கச் செல்வதற்கு முன் முகத்தை கழுவிய பின்பு தேய்த்து மசாஜ் செய்யவும்.
    2. தேவைப்பட்டால் நீங்கள் இந்த பியூட்டி ஆயிலை கை கால் முகம் என நீங்கள் எந்த பகுதி கருப்பாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் எல்லாம் தேய்க்கலாம்.
    3. மறுநாள் காலை எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு பின்னர் குளிக்க செல்லவும்.
    4. ஒரு 30 நாளைக்கு இதே போல் இரவு தூங்கச் செல்வதற்கு முன் நீங்கள் வீட்டிலேயே தயாரித்த பியூட்டி ஆயிலை முகத்தில் தடவி வந்தால் உங்கள் சருமம் பளபளப்பாக ஜொலிக்கும்
    5. 40 வயதிலும் 20 வயது போல் தோற்றமளிக்க இந்த பியூட்டி ஆயிலை 30 நாள் பயன்படுத்துங்கள்.
    6. விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள் தரக்கூடிய முடிவுகளை விட இந்த பியூட்டி ஆயிலில் கிடைக்கும் முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்த அளவு இருக்கும்.

    மேலும் படிக்க: 10 ரூபாய் கடலைமாவு போதும் - "மணப்பெண் போல தினமும் அழகில் ஜொலிக்கலாம்" - 9 DIY ஃபேஸ் பேக்

     


    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil

     

     

    image source: freepik

    Herzindagi video

    Disclaimer

    உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]