herzindagi
image

இயற்கையான முகப்பொலிவிற்கு வேப்பிலை பேஸ் பேக் பயன்படுத்தும் முறை!

முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க ரொம்ப மெனக்கெட வேண்டாம். வீட்டிலேயே மிகவும் எளிதாக கிடைக்கும் வேப்பிலைக் கொண்டு பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துங்க.  
Editorial
Updated:- 2025-09-02, 23:10 IST

பெண்கள் தங்களது சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம். அனைவரது வீடுகளிலும் எளிதில் கிடைக்கும் வேப்பிலைக் கொண்டு கொஞ்சம் பேஸ் பேக் செய்ய முயற்சி செய்யுங்கள்.


வேப்பிலை ஒரு கிருமிநாசினியாக செயல்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வேப்பிலையை வைத்து பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் தெரியுமா?

வேப்பிலை பேஸ்ட்:

வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு, அதன் சாறு இறங்கும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இவற்றை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போன்று தயார் செய்துக் கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக முகத்தை குளிர்ந்த நீரால் கழுவும் போது இதில் ஊள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது. மேலும் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களைப் போக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க: கழுத்து கருப்பாகி உங்களது அழகைக் கெடுக்கிறதா? சட்டென்று மறைய இதைப் பின்பற்றுங்கள்

வேப்பிலையுடன் எலுமிச்சை சாறு:

வேப்பிலை நைஸாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்துக் கொண்டு முகத்திற்கு உபயோகிக்கலாம். ஒருவேளை உங்களிடம் வேப்பிலை பவுடர் இருந்தால் அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து நன்கு அப்ளை செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்யும் போது, சிட்ரிக் அமிலம் மற்றும் பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு முகப்பருக்களை நீக்கவும் உதவுகிறது.

வேப்பிலையுடன் தயிர் மற்றும் கடலை மாவு:

பெண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சருமம் இருக்காது. குறிப்பாக வறட்சியான சருமம் கொண்டவர்கள் என்ன பேஸ் பேக் உபயோகித்தாலும் முகம் மிகவும் வறண்டு போய்விடும். இவற்றிற்கு சிறந்த தீர்வு வேப்பிலை தயிர் மற்றும் கடலை மாவு பேஸ் பேக். வேப்பிலை பவுடருடன் சிறிதளவு தயிர் மற்றும் கடலை மாவு கலந்து பேஸ் பேக் தயார் செய்துக் கொள்ளவும். இவை முகத்தில் அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். இவை சருமத்தை பொலிவாக்கவும், சருமம் வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க: சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க

இதுபோன்ற பேஸ் பேக்குகளை வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மஞ்சள் மற்றும் வேப்பிலை போன்றவற்றையும் முகத்தைப் பொலிவாக்கப் பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் மேற்கூறியபடி செய்து உபயோகிப்பது என்பது சிரமமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியமான முறையில் முகத்தைப் பொலிவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் ஒருமுறையாக பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.

Image credit - freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]