தற்போதைய நவீன காலத்தில் கூந்தல் பிரச்சனையால் பெரும்பாலான இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அதிகப்படியான முடி உதிர்வு, முன்கூட்டிய நரை, தலையின் முன் பகுதியில் வழுக்கை, உடைந்து நொறுங்கும் கூந்தல், அதிகப்படியான ஈறு பேன்கள், பொடுகு தொல்லை, என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆன்லைன் சந்தையில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை வாங்கி தலைமுடிக்கு பயன்படுத்தினாலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இது போன்ற நேரங்களில் சில இயற்கை வீட்டு வைத்தியங்களை நாம் கையில் எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மூலிகை எண்ணெய் உங்கள் கூந்தலில் உள்ள ஈறு பேன்கள் பொடுகு தொல்லையை ஒரே நாளில் போக்கும் வல்லமை கொண்டது.
ஈறு பேன்களை விரட்டும் எண்ணெய் தயாரிப்பு
தேவையான பொருட்கள்
- சுத்தமான நல்லெண்ணெய் 200 கிராம்
- சுத்தமான தேங்காய் எண்ணெய் 100 கிராம்
- வேப்பிலை கொழுந்து இலை ஒரு கொத்து
- சின்ன வெங்காயம் 10 எடுத்து கொள்ளவும்
- பூண்டு - 3 பெரிய சைஸ்
- மிளகு - 15 எண்ணம்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் செய்முறை
- எடுத்து வைத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மொத்தமாக அரைத்துக் கொள்ளவும்.
- சிறிதளவு தண்ணீரை சேர்த்து பேஸ்டாக வரும்வரை அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு இரும்பு கடாயில் 100 கிராம் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- பின்னர் அதில் 100 கிராம் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் நாம் அரைத்து வைத்த கலவையை எண்ணெயில் சேர்த்துக் கொள்ளவும்.
- படுக்கை மிதமான அளவில் வைத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.
- 15 நிமிடம் நன்றாக சூடு படுத்திவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- கொஞ்சம் கலர் மாறிய பின்பு கலவையை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வடிகட்டியை எடுத்து அந்த கலவையை அப்படியே அதில் ஊற்றி எண்ணெய் மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
- இந்த எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.
- பின்னர் ஷாம்பு போட்டு குளிக்கவும்.
- 10 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என அனைவரும் இதை பயன்படுத்தலாம்.
தலைமுடிக்கு எண்ணெயின் நன்மைகள்
உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை நீக்குகிறது
வேம்பில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பொடுகு சிகிச்சையில் உதவக்கூடும். வேம்பை உங்கள் தலைமுடிக்கு திறம்படப் பயன்படுத்துவதால் பொடுகுடன் தொடர்புடைய அரிப்பு, வீக்கம் மற்றும் எரிச்சல் நீங்கும்.
முடி வளர்ச்சியை தீவிரப்படுத்தும்
வேம்பின் மீளுருவாக்கம் செய்யும் பண்புகள் முடி உதிர்தலைக் குறைக்க உதவுகின்றன. வேப்ப எண்ணெயைக் கொண்டு உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க உதவும்.
முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும்
வேம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை முடி முன்கூட்டியே நரைப்பதற்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைத் தடுக்கின்றன. இதற்காக வேப்பம்பூ பொடி அல்லது வேப்ப எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.
வேம்பில் லினோலிக், ஒலிக் மற்றும் ஸ்டீரியிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை உச்சந்தலையை வளர்க்க உதவுகின்றன, இதனால் முடி மென்மையாக இருக்கும்
மேலும் படிக்க:வேலைக்குச் செல்லும் பிசியான பெண்களே - அடர் கருப்பு கூந்தலுக்கு இந்த ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation