கோடையில் வியர்வை பிரச்சனை மிகவும் பொதுவானது. அதிகப்படியான வியர்வை காரணமாகப் பல நேரங்களில் சருமம் கருமையாகிவிடுகிறது குறிப்பாக அக்குள் கருப்பாக மாறும். அத்தகைய சூழ்நிலையில் ஸ்லீவ்லெஸ் உடை அணிவது நன்றாக இருக்காது. எனவே உங்கள் அக்குள்களைச் சரியான முறையில் கவனித்து அவற்றை கருப்பாக மாறாமல் தடுப்பது மிகவும் அவசியம். உங்கள் அக்குள் கருமையாகி விட்டால் அவற்றை முந்தைய சரும நிறத்திற்குத் திரும்பப் பெறுவது மிகவும் கடினம். எனவே இது போன்று நிகழாமல் தடுக்க நீங்கள் சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க: 7 நாட்கள் தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிட்டால் உடலில் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..!
வீட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் உங்களுக்கு வீட்டிலேயே எளிமையாகப் பயன்படுத்தக்கூடியவை. மேலும் உங்களுக்கு எந்த பணமும் செலவாகாது. எனவே உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் 10 விஷயங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.
1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை எடுத்து அதில் 1 தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். இந்தக் கலவையைக் கொண்டு அக்குள் சருமத்தை ஸ்க்ரப் செய்து 5 நிமிடம் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். பேக்கிங் சோடாவுக்கு எக்ஸ்ஃபோலியேட்டிங் சக்தி உள்ளது. இதனால் இறந்த சருமமும் அகற்றி புது சருமத்தைப் பெறலாம்.
கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி உள்ளதால் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. உடலில் நீர்ச்சத்து இல்லாததால் பல சமயங்களில் தோல் கருப்பாக மாறிவிடும். நீரிழப்பு சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் கருமையைக் குறைக்கிறது. அலோ வேரா ஜெல் சருமத்தில் உறிஞ்சப்படுவதால் அதை அக்குள் பகுதிகளில் அப்ளை செய்தால் தோல் கருமையாகாமல் இருக்க உதவுகிறது.
வறட்சியின் காரணமாகச் சருமம் கருப்பாக மாறும். ரோஸ் வாட்டரில் இயற்கையான மாய்ஸ்சரைசர் உள்ளதால் அக்குள்களில் தடவி வந்தால் கருமை நீங்குவதுடன் துர்நாற்றம் வராது.
எலுமிச்சம் பழச்சாற்றைத் தண்ணீரில் கரைத்து அக்குள்களில் தடவவும். இது உங்கள் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும். எலுமிச்சைத் தோலை அக்குள்களில் மெதுவாகத் தேய்க்கவும் செய்யலாம். இதன் மூலம் நீங்கள் நிறையப் பயனடைவீர்கள்.
ஆரஞ்சு பழத்தோலுக்குச் சரும நிறத்தை மேம்படுத்தும் திறன் உள்ளது. நீங்கள் ஆரஞ்சு தோல்களை உலர்த்தி அவற்றிலிருந்து தூள் செய்து, பின்னர் அவற்றைத் தயிர் அல்லது பாலில் கலந்து ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தவும்.
பால் மற்றும் தயிர் மிகவும் நல்ல இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்ஸ். நீங்கள் அவற்றை நேரடியாகத் தோலில் தடவலாம். இது உங்கள் சருமத்தை மேம்படுத்துவதோடு, இறந்த சருமமும் அகற்றும்.
பாலில் கடலை பருப்பு மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டைக் கொண்டு அக்குள்களைச் சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் அக்குள் ஏற்படும் முடி இல்லாமல் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடலை மாவு ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும்.
தேங்காய் நீர் சருமத்தை ஹைட்ரேட் செய்வதுடன், சருமத்தையும் சுத்தம் செய்கிறது. தேங்காய் நீரை அக்குள்களில் அடிக்கடி தடவ வேண்டும். பருத்தி உருண்டைகளைக் கொண்டு செய்யலாம்.
தேனில் ப்ளீச்சிங் தன்மை உள்ளதால் அக்குள் கருமையைக் குறைக்க உதவுகிறது. தேனில் சிறிது மஞ்சளையும் கலந்து கொள்ள வேண்டும்.
முதலில் ஓட்ஸை அரைத்துப் பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த பொடியைக் கற்றாழை ஜெல்லுடன் கலந்து அதைக் கொண்டு அக்குளில் ஸ்கரப் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த சருமமும் நீங்கி நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க: நெஞ்சு வலி வருவதற்கு இந்த 5 காரணங்களாக கூட இருக்கலாம்.. அலட்சியப்படுத்தாதீர்கள்!!
முக்கிய குறிப்பு: உங்கள் சருமம் உணர்திறன் உடையதாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு வைத்தியத்தையும் முயற்சிக்கும் முன் ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik & Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]