face back tips

சமையலுக்கு மட்டுமல்ல, முக பளபளப்பிற்கும் சிவப்பு பருப்பை உபயோகிக்கலாம்! எப்படி தெரியுமா?

<span style="text-align: justify;">எவ்வித பக்க விளைவுகள் இல்லாமலும் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் மைசூரு பருப்பைக் கொண்டு பேசியல் செய்யவும்.</span>
Editorial
Updated:- 2024-03-26, 22:19 IST

முகத்தைப் பளபளப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இன்றைக்குள்ள மாசுபாட்டின் காரணமாக சருமத்தைப் பாதுகாப்பது அனைத்துப் பெண்களுக்கும் பெரும் சவாலாக அமையும். இதற்காக என்ன தான் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தினாலும் முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இது நிச்சயம் அனைத்துப் பெண்களும் மனதளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த மனநிலையை மாற்றி உங்களது முகத்தை பிரகாசமாக்க நினைத்தால், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மைசூரு பருப்பைக் கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள்.

skin beauty tips ()

மேலும் படிக்க: கழுத்தில் கருப்பா இருக்கா? சரி செய்வதற்கான வீட்டு வைத்தியம் இது தான்!

முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மைசூரு பருப்பைத் தண்ணீரில 30 நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து  முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த பேசியலை மேற்கொள்ளும் போது, நிச்சயம் முகத்திற்குப் பொலிவைத் தரக்கூடும். எப்படி என தெரிந்துக் கொள்வதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்துப் பாருங்க.

எப்படி முகத்தைப் பளபளப்பாக்குகிறது?  

  • மைசூரு பருப்பில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு பொலிவை மீட்டு மீண்டும் முகத்தைப் பிரகாசமாக்குகிறது.
  • மைசூரு பருப்பு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. மேலும் புதிய செல்களின் உற்பத்தியை அதிகரித்து முகத்தைப் பொலிவாக்குகிறது.
  • மைசூரு பருப்பில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. மற்றும் முன்கூட்டியே வயதாவதைத் தடுத்து எப்போதும் இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
  • வெயில் காலத்தில் முகம் கருமை அடைவதைத் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மைசூரு பருப்பைக் கொண்டு பேசியல் செய்யவும். இதில் உள்ள எக்ஸ்ஃபோலியேட்டிங் குணங்கள் நிறமி மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் படிப்படியாக அகற்றுகிறது. மேலும் முகத்தில் படிந்துள்ள கருந்திட்டுக்களையும் நீக்குகிறது.
  • மைசூரு பருப்பில் உள்ள இயற்கையான ஈரப்பத பண்புகள் சருமத்தை வறண்டு விட செய்வதில்லை. இதனால் முகத்தில் எவ்வித பருக்களும் ஏற்பட வாய்ப்பில்லை.
  • சிவப்பு பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால்  நச்சு நீக்கம் மற்றும் தெளிவான சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. இருப்பினும், அவை லேசான இயற்கையான ப்ளீச்சிங் முகவராகவும் செயல்படுகின்றன. 

 மேலும் படிக்க: ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவதற்கு முந்திரி உதவுமா?

face glowing ()

அப்புறம் என்ன?  சமையலுக்கு மட்டுமல்ல, இனி உங்களது முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்கும் வேண்டும் என்று நினைத்தால் வாரத்திற்கு ஒருமுறையாவது மைசூரு பருப்பைக் கொண்டு பேசியல் செய்துக் கொள்ளுங்கள். நிச்சயம் எவ்வித பக்க விளைவுகள் இல்லாமலும் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. 

 Image source - Google

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]