பெண்கள் பலரும் சருமத்தை பராமரிப்பது போல தலைமுடியையும் பாதுகாக்க பல முயற்சிகள் செய்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இந்த இளநரை. இளநரை தோன்றுவது என்பது இயற்கையான வயதானதற்கான அடையாளம். ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே இளநரை ஏற்பட தொடங்கிவிடுகிறது. இதற்கு பல உடல் மற்றும் மன அழுத்தம் சார்ந்த காரணங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையில் இளம்வயதில் இளநரை ஏற்படும் 6 முக்கிய காரணங்களை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
குடும்ப வரலாறு:
மரபணு என்பது இளநரை ஏற்பட முதன்மை காரணியாகும். உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு இளம் வயதிலேயே நரைத்த தலைமுடி இருந்தால், உங்களுக்கும் அது ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது பிரீமேச்சூர் கிரேயிங் எனப்படுகிறது. மரபணு மாற்றங்கள் மெலனின் உற்பத்தியைக் குறைத்து, முடியின் நிறத்தை மாற்றுகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு:
உங்கள் உணவில் வைட்டமின் B12, இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைந்தால், இளநரை விரைவாகத் தோன்றலாம். குறிப்பாக, வைட்டமின் B12 குறைபாடு முடியின் நிறத்தை மாற்றும். இதைத் தடுக்க, பச்சை காய்கறிகள், முட்டை, மீன் மற்றும் நட்ஸ் வகைகள் பருப்புகளை உணவில் சேர்க்கவும்.
மன அழுத்தம்:
தொடர்ச்சியான மன அழுத்தம் தலை முடியின் நிறத்தை மாற்றும் திறன் கொண்டது. மன அழுத்தம் மெலனோசைட் செல்களை பாதிக்கிறது, அவை முடியில் நிறத்தை உருவாக்குகின்றன. கிரே ஹேர் ஜீன் மன அழுத்தத்தால் செயல்படுத்தப்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. எனவே, மன அமைதியை பராமரிப்பது அவசியம்.
தைராய்டு பிரச்சினைகள்: ஹார்மோன் சீர்குலைவின் விளைவு
தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவாகவோ ஹைபோதைராய்டிசம் அல்லது அதிகமாகவோ ஹைபர்தைராய்டிசம் இருந்தால், இளம் வயதில் இளநரை ஏற்படலாம். தைராய்டு ஹார்மோன்கள் உடலின் உட்சுரப்பு மண்டலத்தை பாதிக்கின்றன, இது முடியின் வளர்ச்சியையும் நிறத்தையும் பாதிக்கிறது. தைராய்டு பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுகவும்.
புகைப்பழக்கம்:
புகைப்பழக்கம் ரத்த ஓட்டத்தைக் குறைத்து முடிக்கு போதுமான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அடையவிடாது. இதனால் மெலனின் உற்பத்தி குறைகிறது. மருத்துவ ஆராய்ச்சிகள் காட்டுவதாவது, புகைப் பிடிப்பவர்களுக்கு வயதுக்கு முன் இளநரை ஏற்படுவதற்கான வாய்ப்பு 2-4 மடங்கு அதிகம்.
ரசாயன பொருட்களின் தாக்கம்:
கடுமையான ஷாம்பூக்கள், டை மற்றும் ஹேர் புராடக்ட்களில் உள்ள கெமிக்கல் பொருட்கள் (சல்பேட், பாரபென்ஸ், அம்மோனியா) முடியின் இயற்கையான நிறத்தை பாதிக்கின்றன. இவை முடியின் ஃபாலிக்கிள்களை பலவீனப்படுத்தி, இளநரையை துரிதப்படுத்துகின்றன. எனவே இயற்கையான ஹேர் கேர் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
இளம்வயதில் தோன்றும் இளநரையை தடுக்க சத்தான உணவு, மன அழுத்த மேலாண்மை, புகைப்பழக்கத்தை கைவிடுதல் மற்றும் இயற்கையான முடி பராமரிப்பு முறைகளை பின்பற்றவும். மரபணு காரணிகள் இருந்தாலும், சரியான பராமரிப்பு முறை இருந்தால் இளநரை தாமதப்படுத்தும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation