காலையில் சீக்கிரம் எழுவதை தவிர்ப்பதற்காக இரவில் தலைக்கு குளிக்கிறீர்களா? காலையில் சில நிமிடங்கள் கூடுதலாக தூங்குவதற்காக, உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு முக்கியமான வேலையை முன்கூட்டியே செய்து முடிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க
ஆனால், இந்த பழக்கம் நன்மைக்கு பதிலாக, அதிக தீமையையே விளைவிக்கிறது. இங்கு குளிக்கும் நேரம் முக்கியமில்லை, குளித்த பிறகு நீங்கள் மேற்கொள்ளும் நடைமுறைகள் தான் ஆபத்தானவை. இது போன்று செய்யும் போது ஏராளமான பாதிப்புகள் உங்கள் முடியில் ஏற்படும். அவை என்னவென்று இதில் காண்போம். மேலும், இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.
இரவில் தலைக்கு குளித்தால், ஈரமாக இருக்கும் முடியுடன் தூங்க செல்ல நேரிடும். இவ்வாறு செய்வது உங்களை உடல்நல குறைபாடுகளுக்கு உள்ளாக்குவதுடன், உங்கள் முடி வழக்கத்தை விட அதிகமாக சிக்கலடையவும் வாய்ப்புள்ளது. தலைக்கு குளித்த பிறகு, முடியின் மேலடுக்கு (cuticle) திறந்தே இருக்கும். அதனால் தான், ஈரமான முடியை சீவக் கூடாது என்றும், அது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஈரமான தலையுடன் உறங்குவது, பூஞ்சை வளர்ச்சி, பொடுகு, முடி உதிர்தல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், இந்த பிரச்சனைகள் ஈரப்பதமான சூழ்நிலையில் தான் அதிகமாக வளரும்.
இரவில் தலைக்கு குளிப்பதால், காலையில் உங்கள் முடி அழகாக இருக்காது. மாறாக, அது அதிகமாக சிக்கலடைந்து, வறண்டு போகலாம்.
மேலும் படிக்க: வெயிலின் தாக்கத்தால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்... இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!
இதற்காக நீங்கள் இரவில் தலைக்கு குளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சில விஷயங்களில் கவனமாக இருப்பது தான்.
முதலாவதாக, நீங்கள் உறங்க செல்வதற்கு முன் உங்கள் முடி முற்றிலும் உலர்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டாவதாக, முடியில் சிக்கு ஏற்படாமல் இருக்க, லீவ்-இன் கண்டிஷனர் (leave-in conditioner) சிறிது பயன்படுத்தலாம். இவற்றை மேற்கொண்டு உங்கள் முடியை சரியாக பராமரிக்கவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]