herzindagi
salon brown hair

hair coloring : சலூன் ஸ்டைலில் வீட்டிலேயே முடிக்கு கலர் செய்வது எப்படி?

பார்லர் ஸ்டலில் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
Editorial
Updated:- 2023-02-18, 10:28 IST

ஹேர் கலரிங் என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் ஸ்டைலுக்காக செய்தது போலவே தோன்றும். ஆனால் உண்மையில் இளம் தலைமுறையினர் பலரும் இளம் நரைமுடியை மறைக்கவும் தற்போது ஹேர் கலரிங் முறையை கையில் எடுத்து விட்டனர். பல்வேறு காரணங்களால் விரைவில் நரைமுடி பிரச்சனை எட்டி பார்க்கிறது. சிலர், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை கொடுக்க தொடங்கி விடுவார்கள்.

சிலர் இதை கவனிக்க தவறுவதால் தலை முடி முழுவதும் நரை முடியாக மாறிய பின்பு அதை மறைக்க முயற்சிகள் எடுக்கின்றனர். அந்த வகையில் அவர்கள் முதலில் மேற்கொள்ளும் முயற்சி ஹேர் கலரிங். சலூன் ஸ்டலில் ஹேர் கலரிங் செய்வது தற்போது ட்ரெண்டாக இருந்தாலும், இது நரை முடியை மறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

அந்த வகையில் இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி? சலூன் ஸ்டைலில் ஹேர் கலரிங் செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • மருதாணி தூள் - 1 கப்
  • காபி தூள் - 2 டீஸ்பூன் -
  • கேரட் சாறு - 1 டீஸ்பூன்
  • ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்:வெள்ளை முடி பிரச்சனையை சரிசெய்யும் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்!

தயாரிக்கும் முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் காபி தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  • பின்னர் அதில் கேரட் சாறு, ஆப்பிள் வினிகர் சேர்க்கவும்.
  • இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து எடுத்து கொள்ளவும்.
  • இப்போது ஹேர் கலரிங் செய்ய தேவைப்படும் பேஸ்ட் தயார்.

hai color home

பயன்படுத்தும் முறை

  • முதலில் முடியை விரித்து விடவும்.
  • பின்பு பிரஷ் உதவியுடன் தயார் செய்த பேஸ்ட்டை முடியில் பக்குவமாய் தடவவும்.
  • தேவைப்படும் முடியில் மட்டும் கூட தேய்த்து கொள்ளலாம்.
  • இதை சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை அப்படியே தலையில் ஊற விடவும்.

இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் தலைக்கு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!

பராமரிப்பு குறிப்புகள்

  • உங்கள் தலைமுடிக்கு இயற்கையான முறையில் கலரிங் செய்து இருந்தால் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டாம்.
  • வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்க கூடாது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]