வெள்ளை முடி பிரச்சனையை சரிசெய்யும் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்!!

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் உதவியுடன் வெள்ளை முடி பிரச்சனையை எப்படி சரிசெய்வது? என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

white hair problem do this remedy

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேல் தான் தலையில் வெள்ளை முடி பிரச்சனை தொடங்கும். ஆனால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் வெள்ளை முடி பிரச்சனையால் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை சரிசெய்ய பலவகையான விலையுயர்ந்த முடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை முடியை அதிகளவில் சேதப்படுத்தும் என்பதே உண்மை.

சில நேரங்களில் வெள்ளை முடி பிரச்சனை இன்னும் அதிகமாகலாம். வெள்ளை முடியை இயற்கை முறையில் சரிசெய்து அதை கருப்பாக மாற்ற கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் மூலம் வெள்ளை முடி பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் என்பதை அழகுக்கலை நிபுணர் சாயா ஆனந்தி அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

aloe vera gel and coconut oil hair mask

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் – 1 சின்ன கப்
  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • மருதாணி பொடி – 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை

  • முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் மருதாணி பொடி சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.

பயன்படுத்தும் முறை

how to make aloe vera mask

  • முதலில் தலைமுடியை அலசி நன்கு உலர வைக்கவும்.
  • பின்பு தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும்.
  • இவை நன்கு காய்ந்ததும் தண்ணீரில் முடியை அலசவும்.
  • கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் – 2 சின்ன கப்
  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

how to make coconut oil mask

  • முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து உச்சந்தலையில் தடவவும்.


  • இப்படியே 30 நிமிடங்களுக்கு ஊலர விடவும்.
  • நன்கு காய்ந்ததும் தண்ணீரில் முடியை அலசவும்.
  • ஹேர் மாஸ்க் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் தலைமுடியை மென்மையாகவும் கருமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர முடியின் வறட்சியை நீக்குகிறது. அதே சமயம் இந்த ஹேர் மாஸ்க் முடியின் அமைப்பை சரிசெய்து தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP