கரும்புள்ளிகளை போக்க உதவும் மஞ்சள் ஸ்க்ரப்

கரும்புள்ளிகள் பிரச்சனையை போக்க, மஞ்சள் பயன்படுத்தி ஸ்க்ரப் தயாரிக்கும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்.

tricks to make this body scrub with turmeric to reduce dark spots

மஞ்சள் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. இது சமையலுக்கு மட்டுமல்ல, சருமத்தை சிறப்பாக பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. பெரும்பாலும் நாம் அனைவரும் மஞ்சள் பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்திருப்போம். ஆனால் மஞ்சள் பயன்படுத்தி உடல் முழுவதும் பயன்படுத்தக்கூடிய ஸ்க்ரப் கூட தயாரிக்கலாம்.

மஞ்சளில் கிருமி நாசினி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி சருமத்தை ஒளிரச் செய்யும் இதன் பண்புகள், கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற சரும நிறம் போன்ற பிரச்சனைகளை அகற்றவும் உதவுகின்றன. எனவே, இன்று இந்த பதிவில், மஞ்சளை பயன்படுத்தி தயார் செய்யக்கூடிய சில உடல் ஸ்க்ரப்களை பற்றி பார்க்கவிருக்கிறோம்-

மஞ்சள் பாடி ஸ்க்ரப் நன்மைகள்

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மஞ்சள் ஸ்க்ரப் பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக-

  • இது உங்கள் இறந்த சரும செல்களை நீக்கி, உங்கள் சருமத்தை மேலும் பளபளப்பாக மாற்றுகிறது. சருமத்தை சுத்தம் செய்வதோடு, அதை மென்மையாகவும் மாற்றுகிறது.
  • உடல் முழுவதும் பயன்படுத்தக்கூடிய மஞ்சள் ஸ்க்ரப்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவைகள் உங்கள் சருமத்தை குணப்படுத்துகின்றன. இதனால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவத்தல் பிரச்சனைகள் நீங்கும்.
  • மஞ்சள் ஸ்க்ரப் கருவளையங்களை குறைக்க உதவுகிறது. இது உங்கள் கண்களின் கீழ் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மேலும் கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது.
  • மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தை மேலும் தெளிவாக மாற்றும். மஞ்சள் ஸ்க்ரப் தயாரித்து சருமத்தில் தடவினால், சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

மஞ்சள் மற்றும் சர்க்கரை பாடி ஸ்க்ரப்

turmeric powder for dark spot

மஞ்சள், சர்க்கரை மற்றும் தேனை பயன்படுத்தி, நீங்கள் ஒரு மாய்ஸ்சரைசிங் உடல் ஸ்க்ரப் செய்யலாம். இந்த உடல் ஸ்க்ரப் உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. மஞ்சள் சரும பிரச்சனைகளை போக்கும், சர்க்கரை சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும் மற்றும் தேன் உங்கள் சருமத்தை மென்மையாக்கும்.

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் தூள்- ஒரு டீஸ்பூன்
  • சர்க்கரை- ஒரு டீஸ்பூன்
  • தேன்- ஒரு டீஸ்பூன்

ஸ்க்ரப் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை

  • இந்த ஸ்க்ரப் செய்ய, முதலில் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரையை லேசாக அரைக்கவும். மிகவும் கொரகொரப்பாக அரைத்தால் சருமம் சேதமடையும்.
  • ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் தேன் கலக்கவும்.
  • அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
  • இப்போது அதை சருமத்தில் தடவி, கைகளால் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.
  • இந்தக் கலவையை உங்கள் சருமத்தில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை வைத்து விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

மஞ்சள் மற்றும் உப்பு பாடி ஸ்க்ரப்

turmeric powder for dark spot problem

மஞ்சள் மற்றும் உப்பு பயன்படுத்தி ஒரு சிறந்த உடல் ஸ்க்ரப் தயார் செய்யலாம். தேவைப்பட்டால் அதில் வைட்டமின் E எண்ணெய் மற்றும் எசென்ஷியல் எண்ணெய் கலந்து அதில் ஈரப்பதமூட்டும் பண்புகளை சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • உப்பு- 1/2 கப்
  • தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய்- 1/4 கப்
  • மஞ்சள் தூள்- 1-2 டீஸ்பூன்
  • லாவெண்டர் எசென்ஷியல் எண்ணெய்- 7-8 சொட்டுகள்
  • வைட்டமின் ஈ எண்ணெய்- 1 காப்ஸ்யூல்

ஸ்க்ரப் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை

  • முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
  • ஒரு பெரிய ஸ்பூனின் உதவியுடன் அவற்றை நன்றாக கலக்கவும்.
  • இப்போது அதை உங்கள் சருமத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP