
அழகு சாதன பொருட்களில் இருந்து வீட்டு வைத்தியம் வரை, தேன் ஒரு அத்தியாவசிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கூந்தல் பராமரிப்பு என்று வரும் போது, தேன் அளிக்கும் நன்மைகள் ஏராளமாக உள்ளன. தேன் உங்கள் தலைமுடியை மென்மையாக்குவதுடன், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை தேனை பயன்படுத்தி கூந்தலை பராமரிப்பது, முடிக்கு ஒரு புதிய பொலிவை தரும்.
மேலும் படிக்க: பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த மைசூர் பருப்பு ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க
தேன் ஹேர் மாஸ்க் தயாரிப்பது மிகவும் எளிது. தேனுடன், வேறு சில ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்து, வீட்டிலேயே ஒரு சிறந்த ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம். தேனின் நன்மைகளை நீங்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்றால், அவற்றை இந்தப் பதிவில் காணலாம்.
முடி உதிர்வதை குறைக்கிறது: முடி உதிர்தல் என்பது பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை. தேனை பயன்படுத்துவதன் ஒரு முக்கிய நன்மை, அது முடி உதிர்வதை குறைக்கிறது என்பது தான். இது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, கூந்தலை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
முடி சேதமடைவதை தடுக்கிறது: வெப்பம், மாசு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் அடிக்கடி தலைக்கு குளிப்பது போன்ற பழக்கங்கள் முடியை சேதமடைய செய்கின்றன. தேன் போன்ற இயற்கை பொருட்கள் கூந்தலை வலுப்படுத்தி, இத்தகைய சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

முடியை பலப்படுத்துகிறது: பலவீனமான மற்றும் உடையக்கூடிய கூந்தல் எளிதில் உதிர்ந்து விடும். வாரத்திற்கு ஒரு முறை தேன் ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவது, முடி உதிர்வதை கட்டுப்படுத்த உதவும்.
பொடுகு தொல்லைக்கு தீர்வு: தேனில் ஆன்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உச்சந்தலையில் ஏற்படும் தொற்று நோய்களை தடுப்பதுடன், பொடுகு போன்ற பிரச்சனைகளையும் நீக்குகின்றன. இதனால், முடி வளர்ச்சி சீராக இருக்கும்.
மேலும் படிக்க: Pumpkin seeds for hair growth: முடி உதிர்வை தடுக்க உதவும் பூசணி விதைகள்; உங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவும்
கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கிறது: தேன் அதிக ஈரப்பதம் கொண்டது. இது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முடிக்குத் தேவையான ஈரப்பதத்தை அளித்து, கூந்தலை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.
இரண்டு நன்கு பழுத்த வாழைப்பழங்கள், அரை கப் தேன் மற்றும் கால் கப் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாஸ்க்கை உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் சமமாக பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பூ மற்றும் வெதுவெதுப்பான நீரால் குளிக்கலாம்.

முட்டையில் உள்ள புரதம் கூந்தலுக்கு வலிமை அளித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும். தேன், கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதம் அளிக்கும். இரண்டு முட்டைகளுடன் ஒரு கப் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை முடியில் தடவி, 20 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பிறகு, ஷாம்பூ பயன்படுத்தி நன்கு அலசவும்.
இவ்வாறு செய்தால் உங்களுடைய முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், முடி உதிர்வு பிரச்சனைக்கும் உங்களால் தீர்வு காண முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]