கூந்தல் வளர்ச்சிக்கு பல்வேறு விதமான பொருட்களை பயன்படுத்துவது குறித்து நாம் அறிந்திருப்போம். இதில் ஆளி விதைகளை கூந்தல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தலாம் என்று நிறைய வல்லுநர்கள் கூறி நாம் கேட்டிருப்போம். ஏனெனில், கூந்தல் வளர்ச்சிக்கு ஆளி விதைகளின் பங்களிப்பு இன்றி அமையாதது.
மேலும் படிக்க: முடி உதிர்வுக்கு சிம்பிள் தீர்வு; வீட்டிலேயே இருக்கும் இந்த 5 எண்ணெய்களை கூந்தலுக்கு பயன்படுத்துங்கள்
செயற்கையாக நாம் பயன்படுத்தும் சில பொருட்களில் இருந்து ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுப்பதற்காக இயற்கை பொருட்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், முடி வளர்ச்சிக்கு தேவையான ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இயற்கையாகவே ஆளி விதைகளில் இருக்கின்றன. இது உச்சந்தலைக்கு நல்ல ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
அதன்படி, ஆளி விதைகள் கொண்டு வீட்டிலேயே இயற்கையான முறையில் ஜெல் தயாரித்து எப்படி பயன்படுத்தலாம் என்று காண்போம். இதற்காக இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை, ஒன்றரை கப் தண்ணீரில் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். இந்தக் கலவை ஜெல் பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
இதற்கடுத்து, ஒரு சுத்தமான துணி அல்லது வடிகட்டியை கொண்டு விதைகளை மட்டும் தனியாக பிரித்து ஜெல்லை வடிகட்ட வேண்டும். இந்த ஜெல் மிதமான சூட்டில் இருக்கும் போதே இதனை வடிகட்டுவது அவசியம். இதைத் தொடர்ந்து, ஆளி விதை ஜெல் ஆறிய பின்னர் ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். இந்த ஜெல் சுமார் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். அதுவரை இந்தக் கலவையை தாராளமாக பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: தொல்லை தரும் முகப்பருக்களை ஈசியாக போக்கலாம்; இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றவும்
தலைக்கு குளித்த பின்னர், இந்த ஜெல்லை தேவையான அளவிற்கு எடுத்து கூந்தலில் தடவலாம். குறிப்பாக, முடியில் சற்று ஈரப்பதம் இருக்கும் போது தடவினால் கூடுதல் பலன் கிடைக்கும். இது தவிர, இந்த ஜெல்லை உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இப்படி இரவில் மசாஜ் செய்த பின்னர், மறுநாள் காலை குளித்து பார்த்தால் தலைமுடி மிருதுவாக காணப்படும்.
இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு கிடையாது. குறிப்பாக, இதனை தயாரிக்க அதிக செலவாகாது. இதன் காரணமாக எல்லோராலும் எளிதாக வீட்டிலேயே ஆளி விதைகள் ஜெல் தயாரித்து பயன்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]