பல பிரச்சனைகளை சந்திக்கும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு நிரந்தர பொலிவை தரும் வீட்டு ஃபேஸ் வாஷ்

எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் கிடைக்காமல் தேடுகிறீர்கள் என்றால்? இனி இந்த கவலையே வேண்டாம், சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் செய்யலாம்.
image

உணர்திறன் கொண்ட சருமம் மற்றும் எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவராக இருந்தால். உங்கள் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியாது. எண்ணெய் பசையுள்ள சருமத்தின் மோசமான விஷயம் என்னவென்றால், எப்போதும் அழுக்காகவும் மந்தமாகவும் இருக்கும். மேலும் வெளியில் வாங்கும் ஃபேஸ் வாஷ்கள் கெமிக்கல் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும். அவை எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றதாக இருப்பது சற்று கடினமானதாக இருக்கும். இருப்பினும் நம் எண்ணெய் பசை சருமத்தினர் அவ்வப்போது முகத்தை சுத்தப்படுத்துவது முக்கியம்.

உங்கள் எண்ணெய்ப் பசை சருமத்திற்கு சிகிச்சையளிப்பதாகக் கூறும் பல்வேறு வகையான ஃபேஸ் வாஷ்கள் சந்தையில் கிடைக்கின்றன என்றாலும், அவை உண்மையில் வேலை செய்யாமல் போகலாம் அல்லது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். உங்கள் எண்ணெய் சருமத்திற்கு இயற்கையான ஃபேஸ் வாஷ்களை கடைபிடித்தால் நல்ல பலனை பார்க்கலாம்.

எண்ணெய் பசை சருமத்திற்கு ஃபேஸ் வாஷ்கள்

இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

ரோஸ் வாட்டர் ஃபேஸ் வாஷ்

ரோஸ் வாட்டர் இப்போது நீண்ட காலமாக நம் அழகு பாரமரிப்பு வழக்கத்தில் பிரதானமாக உள்ளது. ரோஸ் வாட்டர் சருமத்தை டோனிங் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளதால் எண்ணெய் சருமத்திற்கு சிறந்தது. இந்த மூலப்பொருள் பொதுவாக பல ரெடிமேட் ஃபேஸ் வாஷ்களில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் சருமத்தை குளிர்விக்கும் தன்மை கொண்டது. ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவது சருமத்தில் சிறந்த pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ஒரு காட்டன் பேடில், சிறிது ரோஸ் வாட்டரை தெளித்து, அதை சருமம் முழுவதும் தேய்க்கவும். அதை சிறிது நேரம் ஊற விட்டு தண்ணீரில் முகத்தை கழுவவும். உங்கள் சருமம் உடனடியாக சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

rose water inside 2 (1)Image Credit: Freepik


எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் வாஷ்

எலுமிச்சை மற்றும் தேன் இரண்டும் சருமத்திற்குச் சிறந்த பொருட்களாகும். எலுமிச்சை சிட்ரிக் அமிலத்துடன் நிரம்பியிருந்தாலும், தேன் ஈரப்பத மூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. எலுமிச்சை எண்ணெய் சருமத்திற்கு ஒரு நல்ல சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது மற்றும் தேன் சருமத்தில் எண்ணெய் சேர்க்காமல் ஈரப்பதமாக்க உதவுகிறது. வெளியில் வாங்கும் பல ஃபேஸ் வாஷ்கள் முகத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றிவிடுகின்றன, ஆனால் இது உங்கள் சருமத்தை சுத்தமாகவும் அதே நேரத்தில் ஈரப்பதமாகவும் வைக்கிறது. ஒரு பாத்திரத்தில், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து தண்ணீரில் கழுவவும்.

மேலும் படிக்க: மணப்பெண்கள் எதிர்பார்க்கும் சரும அழகைப் பெற முயற்சிக்க வேண்டிய 3 ஃபேஸ் பெக்

காபி ஃபேஸ் வாஷ்

காபி சருமத்தை நன்கு சுத்தம் செய்ய உதவுகிறது, முகத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். காபியின் எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, சருமத்தின் pH சமநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் அரைத்த காபி தூள், 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தேய்க்கவும். சில நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவவும்.

cinnamon face pack insideImage Credit: Freepik


ஆப்பிள் சைடர் வினிகர் ஃபேஸ் வாஷ்

முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி சருமத்தை மந்தமாகவும் அழுக்காகவும் ஆக்குகிறது. ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற க்ளென்சரைப் பயன்படுத்துவது சருமத்திற்கு உதவியாக இருக்கும். இது இறந்த சருமம் மற்றும் சருமத்தில் குவிந்துள்ள அழுக்குகளை மெதுவாக நீக்குகிறது. ஒரு பாத்திரத்தில், 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலந்து காட்டன் பேடைப் பயன்படுத்தி முகத்தில் தடவவும். சில நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் தண்ணீரில் கழுவவும்.

மேலும் படிக்க: முகத்தில் வளரும் முடியை நிரந்தரமாக போக்க சூப்பரான வீட்டு வைத்தியம்

கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் வாஷ்

கடலை மாவு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, அதனால்தான் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மூலப்பொருள். மஞ்சளுடன் சேர்த்து கடலை மாவு பல அற்புதங்களைச் செய்கிறது. இரண்டு பொருட்களும் சேர்ந்து சருமத்தை உரிக்கவும் பிரகாசமாகவும் மாற்ற உதவும். ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் சிட்டிகை மஞ்சள் சேர்த்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சில நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவவும்.

5 பொருட்கள் இயற்கையானவை மற்றும் பயனுள்ளவை என்றாலும், தோல் ஒவ்வாமைகளைத் தடுக்க அவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் முகத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு கையில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP