herzindagi
pedicure treatment

Pedicure At Home:பாதங்களை அழகாக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்துக் கோங்க!

<span style="text-align: justify;">பாதங்களுக்கு கொடுக்கும் சிகிச்சை முறைகள் வெறும் அழகிற்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-02-08, 16:35 IST

பெண்கள் எப்போதுமே தன்னை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் என்ன? சரும பராமரிப்பிற்கு காட்டும் அக்கறையை உடலில் உள்ள மற்ற பாகங்களுக்குக் காட்டுவதில்லை. குறிப்பாக கால்களைப் பாதுகாக்க அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. நாம் பாதங்களை அழகுப்படுத்துவது என்பது வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் தசைகள் இறுக்கம் பெற்று நலமுடன் வாழ்வதற்கு வழிவகுக்கிறது. மேலும் கால்களில் ஆணி, பூஞ்சை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க உதவியாக உள்ளது.

இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது பெடிக்யூர். இதற்காக அழகு நிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. உங்களது வீடுகளிலேயே நாம் பெடிக்யூர் செய்துக் கொள்ள முடியும். இதோ எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

pedicure step by steps ()

வீட்டிலேயே பெடிக்யூர் செய்யும் முறை: 

மேலும் படிங்க: தினமும் மறக்காமல் இத செய்திடுங்க..நிச்சயம் முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்!

  • பெண்கள் வீடுகளிலேயே பெடிக்யூர் செய்வதற்கு முன்னதாக நக வெட்டி, உப்பு, நெயில் பாலிஷ், பிரஷ், வெதுவெதுப்பான தண்ணீர், காட்டன் துணி போன்றவற்றை முதலில் தயாராக வைத்துக் கொள்ளவும். இதையடுத்து கால்களில் நீளமாக வளர்ந்துள்ள நகங்களை வெட்டிக் கொள்ளவும். 
  • நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் ஏற்கனவே நகங்களில் போட்டுள்ள நெயில் பாலிஷை அகற்றிக் கொண்டு, நகங்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும். 
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். தண்ணீர் ஓரளவிற்கு காய்ந்தவுடன் அதனுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • இதையடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் காய்ச்சிய தண்ணீரை ஊற்றி கணுக்கால் வரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் கலந்துக் கொள்ளவும். இதனுடன் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், பேக்கிங் போசடா போன்றவற்றைக் கலக்கவும்.
  • எலுமிச்சை தோலைக் கொண்டு கால் விரல்களின் இடுக்குகள் மற்றும் பாதங்களில் நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் முன்னதாக கலந்து வைத்துள்ள தண்ணீருக்குள் கால்களை வைத்து மசாஜ் செய்யவும்.  

feet treatment

  • பின்னர் காட்டன் துணியைக் கொண்டு கால்களை ஈரமில்லாமல் துடைத்தெடுக்கவும். இதையடுத்து மாய்ஸ்சரைகளைப் பயன்படுத்தி, உங்களுக்கு பிடித்த கலரில் நெயில் பாலிஷ்களைப் போட்டுக்கொள்ளுங்கள். இது உங்களது பாதங்களை அழகாகக் காட்டும். இவ்வளவு தான் சிம்பிளாக நீங்கள் வீடுகளிலேயே பெடிக்யூர் செய்துக் கொள்ள முடியும்.

பெடிக்யூர் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • உடல் சுத்தமாக இருந்தால் நோய் எதுவும் அண்டாது என்பதால் எப்போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். பாதங்களுக்கு கொடுக்கும் சிகிச்சை முறைகள் வெறும் அழகிற்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

மேலும் படிங்க:  முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? வீட்டிலேயே இந்த பேசியல் பண்ணிப்பாருங்க!

 

gel pedicure

 

  • சூடான தண்ணீரில் கால்களை உள்ளே வைக்கும் போது கால்களில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்குகிறது. இதனால் குதிக்கால் வெடிப்பு, வறட்சி மற்றும் வெண்மையான தோல் போன்ற பிரச்சனை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் பாதங்களை அழகாக்குவதும் மட்டுமல்ல, கால்களுக்கு மசாஜ் கொடுக்கும் போது நல்ல ரிலாக்ஸான அனுபவத்தை நாம் பெறமுடியும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]